அம்பாறையில் இடம் பெற்ற மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டம்.

எம்.ஜே.எம்.சஜீத்



அம்பாறை மாவட்டத்தில் வாழ்கின்ற மூவின மக்களின் உணர்வுகளை மதிக்கும் வகையில் அனைத்து திணைக்களத் தலைவர்களும் ஒன்றினைந்து மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்றும் தன்னை அம்பாறை மாவட்ட ஒருங்கினைப்பு குழு இணை தலைவராக நியமித்த ஜனாதிபதி மைத்திரி பால சிறி சேன அவர்களுக்கும் தன்னை சிபாரிசு செய்த முன்னால் அமைச்சர் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்க்கும் நன்றி தெரிவிப்பதாகவும் கிழக்கு மாகாண எதிர்கட்சி தலைவரும் அம்பாறை மாவட்ட ஒருங்கினைப்பு குழு இனைத்தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.


dcc-3


அம்பாறை மாவட்ட ஒருங்கினைப்பு குழு கூட்டம் இனைத்தலைவர்களான அமைச்சர் டயாகமகே மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர்,றொபின், மற்றும் கிழக்கு மாகாண எதிர்கட்சி தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை ஆகியோரின் தலைமையில் 2016.09.07 இன்று அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது இனைத்தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார்.


img_20160907_105400


இதன் போது 2015 ஆம் ஆண்டில் நடைமுறை படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் 2016 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ள குடிநீர் வசதி, வீதி அபிவிருத்தி ,அனைவருக்கும் மின்சாரம், சுகாதார சேவைகள் உற்பட பலவேறு விடயங்கள் பற்றி ஆராயப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் துசித பீ வனிகசிங்க , அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் ,கிழக்கு மாகாண சபை அமைச்சர், உறுப்பினர்கள் மற்றும் தினைகளத் தலைவர்களும் கலந்து கொண்டனர்.


dcc-5 dcc-6

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment