உழ்ஹிய்யாவை நிறைவேற்ற கால்நடைகளை கொண்டு செல்வதில் எந்தத்தடைகளுமில்லை.

MJM.Sajeeth)


புனித ஹஜ்ஜூப் பெருநாளையொட்டி உழ்ஹிய்யா கடமையை நிறைவேற்றுவதற்காக கிழக்கு மாகாணத்திலிருந்து கால்நடைகளை வெளிமாவட்டங்களுக்கு கொண்டு செல்வதில் எந்தத்தடைகளுமில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் தெரிவித்தார்.


உழ்ஹிய்யா கடமையினை நிறைவேற்றுவோர் அதுசம்மந்தமான சட்டவிதிகளை கடைப்பிடித்து ஏனையோரின் உணர்வுகளை தூண்டாத வகையில் தங்களது கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.


கிழக்கு மாகாணத்திலிருந்து உழ்ஹிய்யா கடமைக்காக கால்நடைகளை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்வதில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சிணைகள் தொடர்பில் கிழக்கு மாகாண கால்நடை உற்பத்தித் திணைக்களப் பணிப்பாளரை தொடர்புகொண்ட போது அவர் மேற்படி உறுதிமொழி வழங்கியதாகவும் மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.


குறிப்பாக உழ்ஹிய்யா கடமைக்காக பசு மாடுகளையும், நோயுள்ள மாடுகளையும் கொண்டு செல்ல முடியாது எனவும், அதற்குத் தகுதியானவற்றை உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்ல எந்தத்தடையும் இல்லையெனவும் பணிப்பாளர் தெரிவித்ததாக மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ் சுபையிர் மேலும் தெரிவித்தார்.

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment