மலேசியா பிரபல பல்கலைக்கழகத்துடன் மட்டக்களப்பு பல்கலைக்கழகம் ஒப்பந்தம்.

மலேசியாவின் மிகப்பெரும் பல்கலைக்கழகமான ஸுல்தான் அஸ்லான் ஷா இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று  செவ்வாய்க்கிழமை கைச்சாத்திடப்பட்டது.


unnamed



மலேசியாவின் பேராக் மாநிலத்தின் தலைநகர் ஈப்போவில் அமைந்துள்ள அம்ஜேயா மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சரும், மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தின் நிறைவேற்று அதிகாரி பொறியியலாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.


unnamed-1



இந்நிகழ்வில், மலேசியா பேராக் மாநில முதலமைச்சர் சாம்பிரி அப்துல் காதிர், மலேசியா கல்விஅமைச்சர் மஹ்ஷிர் ஹாலித், இலங்கையின் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஸுல்தான் அஸ்லான் ஷ பல்கலைக்கழகம் மற்றும் மட்டக்களப்பு பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டமைக் குறிப்பிடத்தக்கது.


media unit of State Minister of Rehabilitation and Resettlement
R.Hassan

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment