கிழக்கு மண்ணுக்கு பெருமை சேர்த்த ஏறாவூர் முஹம்மது சப்றாஸ்.

வை.எம்.பைரூஸ்ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் வர்த்தகப்பிரிவில் முதலாமாண்டில் கற்கும் மாணவனான ஏறாவூரைச் சேர்ந்த முஹம்மது சப்றாஸ் நாடளாவிய ரீதியில் நடக்கும் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கிரிக்கட் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் தங்க பதக்கம் பெற்றார்.


இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களுக்கிடையில் மூன்று ஆண்டுகளுக்கொரு முறை இடம்பெறும் இவ்விளையாட்டுப் போட்டியானது , (மினி ஒலிம்பிக் என்றும் அழைக்கப்படுகின்றது) அதில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியிலயே ஏறாவூரைச் சேர்ந்த சப்றாஸ் தங்கப்பதக்கம் பெற்று ஏறாவூர் பிரதேசத்துக்கும் முழு கிழக்கு மண்ணுக்கும் பெருமை சேர்த்துள்ளார்.


இவரே ஏறாவூர் பிரதேசத்தில் முதன் முறையில் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான கிரிக்கெட் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற ஒரே வீரராவார். இறுதிப்போட்டியில் இவர் 8 ஓவர்களை வீசி இரண்டு ஓவர்களில் எது வீத ரன்களுமின்றியும் மற்றும் மொத்தமாக இரண்டு விக்கட்கள் அடங்களாக 21 ஓட்டங்களையும் கொடுத்துள்ளார். இதில் இவருடைய கெட்ரிக் வாய்ப்பும் சற்று நழுவ விடப்பட்டுள்ளது.


“ஏறாவூரில் பிரபல்யமான விளையாட்டுக் கழகமான YHSC யின் நட்சத்திர வீரரான இவர், கடந்த காலங்களில் மாவட்ட, மாகண ரீதியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளிலும் பல சாதனைகளைப் படைத்துள்ளார்.


கிரிக்கட் வரலாற்றில் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே தனது திறமைகளை வெளிக்காட்டி வரும் சப்றாஸ் அவர்கள் மென்மேலும் சிறப்புடன் விளையாட வாழ்த்துகிறோம்.

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment