SAITM மருத்துவ மாணவா்கள் இலங்கையா்களுக்கு சேவையாற்றுவதற்கும் தயார்.

(அஷ்ரப் ஏ சமத்)


SAITM மருத்துவ மாணவா்கள் இலங்கையா்களுக்கு சேவையாற்றுவதற்கும் தயார் . இந்த நாட்டிலிருந்து கொண்டு நாங்கள் கற்ற எம்.பி.பி.எஸ் பட்டத்துக்காக தம்மை பதிவு செய்து சேவையாற்றுவதற்கு இலங்கை மருத்துவ கவுன்சிலிடம் மனிதபிமான முறையில் நடவடிக்கை எடுங்கள் என மாலபேயில் உள்ள ”சயிட்டம்” மருத்துவ பல்கலைக்கழக மருத்துவ மாணவா்கள் தெரிவிப்பு


நேற்று (7) ஆம் இலங்கை மன்றக் கல்லுாாியில் நடைபெற்ற ஊடகடவியலாளா் மாநாட்டின்போ தே தனியாா் மருத்துவக் கல்லுாாியில் பயிலும் மாணாவர்கள் மேற்கன்டவாறு தெரிவித்தனா்.


SAMSUNG CSC


மாலபே பல்கலைக்கழகத்தில் 6 வருடங்கள் மருத்துவப் பட்டப்படிப்பை முடித்த இறுதியாண்டு மாணவா்கள் கண்னீா் சிந்த தமது நிலைமைகளை விளக்கிக் கூறினாா். இம் மாநாட்டில் தில்சான் பெர்ணான்டோ, தில்சான் சம்பத், செல்வி வரதராஜன், வருனி, ஜே.பீரிஸ் உரையாற்றினாா்கள். ஏற்கனவே எமது வைத்தியக கனவினை இலங்கை மருத்துவ கவுன்சில் பதிவை வழங்குவதற்கு மறுப்பளிப்பதையிட்டு எமது மாணவா் ஒருவா் உயா் நீதிமன்றில் வழக்குத் தாக்குதலையும் மேற்கொண்டுள்ளோம்.


நாங்கள் கொழும்பு மற்றும் பல்வேறு மாவட்டங்களில் தமது வீடுகளையும், காணிநிலங்களையும் விற்று எமது பெற்றோா்கள் மாலபே தனியாா் மருத்துவக் கல்லுாாியில் சோ்த்தனா் நாங்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்குச் சென்று எமது இலங்கைக்குரிய பணத்தினை வெளிநாடுகளுக்கு செலுத்தி பயிலாமல் தமது பெற்றோா்களுடன் இலங்கையிலேயே வாழ்ந்து அவா்களின் கனவுகளை நனவாக்கவே இந்த மருத்துவக் கல்வியை பயின்றோம்.


SAMSUNG CSC


இலங்கையில் உள்ள ”இசட் ஸ்கோா் ”முறையினால் இநத நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் 1500 மருத்துவ மாணவா்களுக்கே அனுமதி மற்றும் மாவட்ட பல்கலைக்கழக முறை வெட்டுப்புள்ளிகளினால் வெகுவாகப் நாங்கள் வைத்தியத்துறை அரச பல்கலைக்கழக செல்ல முடியுமால் பாதிக்கப்பட்டோம். கொழும்பு மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் கற்று 2ஏ 1சீ எடுத்தும் இசட் முறையினால் பாதிக்கப்ட்டதானலேயே எனது பெற்றோா் எனக்காக எனது சிறுவயதில் இருந்து வைத்தியராகி இந்த நாட்டுக்கு சேவைசெய்ய எனது கனவை நனவாக்கினாா்கள்.ஒரு மாணவா் மருத்துவக் கல்வி பயிலுவதற்கு 10 மில்லியன் ருபாவை செலவளிக்க வேண்டியுள்ளது. 950 க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவாகள் இங்கு 6 வருடங்களாக பயின்று வருகின்றனா். நவலோக்க, மற்றும் ஆஸ்ரி, தனியாா் வைத்தியசாலையிலும் அரச கடுவெல, அவிசாவலை போன்ற வைத்தியசாலைகளிலும் பயிற்சிகளையும் எடுத்துள்ளோம்.


SAMSUNG CSC


எம்.பி.பி.எஸ் பட்டத்துக்காக தம்மை பதிவு செய்துள்ள சகல மாணவா்களையும் சிறந்த பேராசிரியா்கள் மற்றும் விரிவுரையாளா்களிடமிருந்து 6 ஆண்டுகளுக்கு மேலாக பயின்று வருகின்றனா். இதில் பேராசிரியா் நெவில் பேரா, பேராசிரியா் தீபால் வீரசேகர, பேராசிரியா் தீப்தி சமரகே, பேராசிரியா் கோலித செல்லஹேவா கலாநிதி வசந்த பெரேரா, பல சிறந்த பேராசிரியா்கள் எங்களை பயிற்றுவிக்கின்றனா்.


மருத்துவம் சம்பந்தமாக இந்த நாட்டில் எவ்வேளையிலும் தாம் பக்க சாா்பற்ற பரீட்சைக்கு தோற்ற தயராக உள்ளதாக தெரிவித்துள்ளனா். இதன மூலம் மாணாவர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத் வாய்ப்பு கிடைப்பதுடன் எமது கல்வியின் தரம் குறித்து பரப்படும் போலியனா பிரச்சாரங்களுக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் அமைந்திருக்கும். சட்டம் மருத்துவக் கல்லுாாி 500 மில்லியன் ருபா பெறுமதியான புலமைப்பரிசில்கள் தகைமை வாய்ந்த மாணாவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இடைக்கால மருத்துவ அதிகாரிகள் எனும் பதிவை எமக்கு வழங்குவதற்கு இலங்கை மருத்துவ சம்மேளனம் சட்ட ரீதியான அதிகாரத்தை கொண்டுள்ள போதிலும் துரதிர்ஷ்டவசமாக இதை அச்சம்மேளனம் மறுத்துள்ளது. எனவே எமது சக மாணவா் ஒருவா் இதை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளாா். இது தொடா்பான உண்மை நிலை விரைவில் வெளிவரும் என்பதில் நாம் எதிா்பார்ப்புடன் உள்ளோம். என சட்டம் எம்.பி.பி.எஸ் பட்டதாரியான தரிந்த ருவன்பத்தினகே தெரிவித்தாா்.

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment