நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் டொனால்டு டிரம்ப் அதிபர் பதவியை இழக்க செய்ய தீவிர நடவடிக்கை.

அமெரிக்க ஜனாதிபதியாக வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரது பதவியை பறிக்க திட்டமிட்டுள்ளதாக பிரபல சட்ட ஆலோசகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு தற்போதையை ஜனாதிபதியான ஒபாமாவை டொனால்ட் டிரம்ப் நேரடியாக சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார்.
அதில், ‘டொனால்ட் டிரம்ப் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரது பதவியை பறிக்கும் அளவிற்கு அவர் மீது ஒரு வலிமையான குற்றச்சாட்டு உள்ளது.இந்நிலையில், அமெரிக்காவின் பிரபல சட்ட ஆலோசகரான கிரிஸ்டோபர் பீட்டர்சன்என்பவர் ஒரு அதிரடி தகவலை வெளியிட்டுள்ளார்.
ஏனெனில், இந்த பல்கலைக்கழகத்தில் சேருவதற்கும் முதலீடு செய்வதற்கும் வாடிக்கையாளர்களை தூண்டிவிடும் வகையில் அவர் சட்டவிரோதமான விளம்பரங்களை வெளியிட்டார்.சில ஆண்டுகளுக்கு முன்னர் டிரம்ப் பல்கலைக்கழகம் Trump University என்ற பல்கலைக்கழகத்தை தொடங்கிய டிரம்ப் கடந்த 2010 ஆண்டு அதனை அவசர அவசரமாக மூடினார்.
இதற்கு போதுமான ஆதாரங்கள் உள்ளன. டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக வெற்றி பெற்ற நிலையிலும் இந்த வழக்கு நீதிமன்றத்தில் செல்லுபடியாகும்.அமெரிக்க நாட்டில் உண்மைக்கு எதிரான தகவல்கள் கூறி வாடிக்கையாளர்களை தூண்டிவிடுவது சட்டத்திற்கு எதிரான செயலாகும். ஆனால், டொனால்ட் டிரம்ப் இதனை கருத்தில் கொள்ளாமல் தவறான விளம்பரங்கள் மூலம் ஆதாயம் பெற்றுள்ளார்.
இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சிகளில் தற்போது தீவிரமாக ஈடுப்பட்டு வருவதாக கிரிஸ்டோபர் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.மேலும், டொனால்ட் டிரம்பிற்கு எதிரான பொதுமக்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தால் ஒரு சில வாரங்களில் அவர் பதவி பறிக்கப்படும்.
இதனை செயல்படுத்தினால் டிரம்பிற்கு அடுத்த நிலையில் உள்ள துணை ஜனாதிபதியான மிகெ பென்ஸ் அடுத்த ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்பார்.

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment