அவதானம்..!!! பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் குழந்தைகளை எப்படி அணுகுவார்கள் தெரியுமா..??

பெற்றோரின் அருகாமைக்கு ஏங்கும் குழந்தைகளை அடையாளங்கண்டு, அவைகளோடு நெருங்கி பாசப்பிணைப்பை உருவாக்குவதுபோல் நடிப்பார்கள்.

“நண்பர்கள் வட்டம் இல்லாமல் தனிமையில் விளையாடும் குழந்தைகள், பெற்றோர்களின் அரவணைப்பு முழுமையாக கிடைக்காமல் தனிமையில் வளரும் குழந்தைகள், தனியாக இருக்கும் சிறுவர், சிறுமியர்கள் மீது அவர்கள் தனிக்கவனம் செலுத்துவார்கள். தனியாக விளையாடும் குழந்தையின் ஏக்கத்தை அறிந்து, அதோடு விளையாடி நெருக்கத்தை ஏற்படுத்துவார்கள். 

அந்த நபர்கள் காட்டும் பரிவில் அந்த குழந்தை உருகிப்போய்விடும். பெற்றோரின் அருகாமைக்கு ஏங்கும் குழந்தைகளை அடையாளங்கண்டு, அவைகளோடு நெருங்கி பாசப்பிணைப்பை உருவாக்குவதுபோல் நடிப்பார்கள். இப்படிப்பட்ட நபர்கள் முதலில் ஒரு குழந்தையை அடையாளங்காண்பார்கள். பின்பு அதன் அருகில் சென்று எதேச்சையாக தொடுவது, தோள்மீது கைபோடுவது, கைகளை உரசுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். தவறான நோக்கம் எதுவுமின்றி, இயல்பாக இது நடப்பதுபோல் காட்டிக்கொள்வார்கள்.

பெற்றோர்களிடம் குழந்தைகள் எதையெல்லாம் விரும்பி கேட் கிறார்கள்? அதில் எதையெல்லாம் வாங்கி கொடுக்க மறுக் கிறார்கள்? என்பதை தெரிந்து கொண்டு அவைகளை வாங்கிக்கொடுத்து குழந்தைகளை தன்பக்கம் ஈர்க்க முயற்சிப்பார்கள். ‘தான் வாங்கி கொடுப்பதை பெற்றோரிடம் சொல்லாதே. சொன்னால் அவர்கள் உன்னை திட்டுவார்கள்’ என கூறி, ரகசியத்தை பாதுகாக்க கட்டாயப்படுத்துவார்கள். பின்பு தனது பாலியல் வன்முறைகளை மெல்ல மெல்ல பிரயோகிப்பார்கள். அதைப் பற்றியும் பெற்றோரிடம் சொல்லக்கூடாது என்பார்கள். 

ஒருகட்டத்தில் குழந்தைகளை மிரட்டி பணியவைக்கவும் செய்வார்கள். பிஞ்சுகள் இத்தகைய நஞ்சு மனிதர்களிடம் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாக்கவேண்டும். குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானால், அந்த பாதிப்பு அவர்கள் பெரிய பெண்ணாகும்போதும் தொடரும். அதனால் பெற்றோர் இதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். சிறுமிகள் மட்டுமல்ல சிறுவர்களும் பெருமளவு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை பெற்றோர் உணர்ந்துகொள்ளவேண்டும்”

ஆகவே...சிறுவர்கள், குழந்தைகள் விடயத்தில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்து இத்தகைய கயவர்களின் காமப் பசிக்கு பிஞ்சுகள் இரையாகாமல் பாதுகாத்துக் கொள்வது நம் அனைவரதும் கடமையாகும்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment