இஸ்லாமியர்களை அமெரிக்காவுக்கு உள்ளே நுழைவதற்கு தடைவிதிப்பு – டரம்ப்


இஸ்லாமியர்களை நாட்டுக்குள் அனுமதிக்க கூடாது என்று கூறியது சரியானதே என்று அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் குடியரசு கட்சியின் சார்பில் அதிபர் தேர்தலில் வேட்பாளராக நின்ற டொனால்ட் டிரம்ப், “நான் மட்டும் அமெரிக்காவின் ஜனாதிபதியால், அமெரிக்காவில் வசிக்கும் இஸ்லாமிய மக்களுக்கு தடைவிதிப்பேன்.

ஏனெனில் அமெரிக்காவில் தீவிரவாதம் தலைதூக்குவதற்கு இஸ்லாமியர்களே காரணம்,” என தனது தேர்தல் பிரசாரங்களை முன்வைத்திருந்தார். மேலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான பல்வேறு சர்ச்சைக்குரிய யோசனைகளையும் முன்வைத்தார்.

இஸ்லாமியர்களுக்கு தனி பதிவேடு, அமெரிக்காவில் இஸ்லாமியர்கள் நுழைவதற்கு தடைவிதிப்பு போன்ற பல்வேறு யோசனைகள் மூலம் விமர்சனத்திற்கும் ஆளாகியிருந்தார்.

இந்நிலையில் கடந்த திங்கள் கிழமை ஜேர்மனியில் மார்க்கெட் பகுதியில் ‘டிரக்’ தாக்குதல் நடத்தப்பட்டது, இதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கார்லோஃப் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த இரு தாக்குதலுக்கும் டொனால்ட் டிரம்ப் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளதோடு.

இவ்வாறான சூழ்சிலைகள் உருவாகுவதற்கு முஸ்லிம் வாழ் தீவரவாதிகளே காரணம். ஆகவே அவர்களை நாட்டுக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

“ஐரோப்பா, துருக்கியில் நிகழ்ந்திருப்பது பயங்கரமான சம்பவம். மிக மிக பயங்கரமானது. நம்முடைய உளவு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு நல்ல முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 

என்றாலும், மனிதாபிமானத்தின் மீது நடத்தப்பட்ட கோரமான தாக்குதலை சகிக்க முடியவில்லை” எனவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவங்களால், இஸ்லாமியர்கள் தொடர்பான திட்டங்கள் குறித்து எல்லோருக்கும் தெரியும். ஐரோப்பாவிலும், துருக்கியிலும் இப்போது நடந்திருப்பதைப் பார்க்கும்போது, என் யோசனை 100 சதவீதம் சரி என்பது நிரூபணமாகிறது’ என்றார். ஆகவே எனது முடிவுக்கு மாற்று கருத்து இல்லை என ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment