பாலமுனை மாவட்ட வைத்தியசாலையை கிழக்கு மாகாணத்திற்கு பொதுவானதொரு கண் வைத்தியசாலையாக அமைக்குமாறு வேண்டுகோள்.


எம்.ஜே. எம். சஜீத் 

பாலமுனை மாவட்ட வைத்தியசாலையை கிழக்கு மாகாணத்திற்கு பொதுவானதொரு கண் வைத்தியசாலையாக அமைக்குமாறு வேண்டுகோள்.

எதிர்க் கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை

பாலமுனை மாவட்ட வைத்தியசாலையை கிழக்கு மாகாணத்திற்கு பொதுவானதொரு கண் வைத்தியசாலையாக அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டுமென கிழக்கு மாகாண

 சுகாதார அமைச்சின் வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டிற்கான சுகாதார அமைச்சிற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.....

பாலமுனை மாவட்ட வைத்தியசாலை கிழக்கு மாகாணத்திற்கு பொதுவானதொரு கண்(Eye) இவ்வைத்தியசாலையாக அமைய வேண்டும். 1954ம் ஆண்டு மத்திய மருந்தகமாக ஆரம்பிக்கப்பட்ட பாலமுனை வைத்தியசாலை தற்போது மாவட்ட வைத்தியசாலையாக இயங்கிக் கொண்டிருக்கின்றது. 

இது அம்பாரை மாவட்டத்தின் பொத்துவில் தொடக்கம் மருதமுனைக்குமான ஒரு மையப்பகுதியில் A4 நெடுஞ்சாலையில் 04 ஏக்கர் நிலப்பரப்பில் எழில் மிகு தோற்றத்துடன் அமையப்பெற்றுள்ளது.

தற்போது அம்பாறை மாவட்டத்தின் சனத்தொகைக்கேற்பே அந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற கண் நோயாளர்களின் நலன்கள் போதியளவு கவனிக்கப்படுவதற்கான ஒரு வைத்திய குறைபாடு காணப்படுகின்றது. இந் நோயுடைய மக்கள் பாரிய செலவுகளைச் செய்து கொழும்பு மற்றும் தூரி பிரதேசங்களுக்கு செல்கின்றனர்.

இவ் வைத்தியசாலை தென் கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அருகில் அமையப் பெற்றுள்ளதால் வைத்தியசாலைக்குத் தேவையான வசதி வாய்ப்புக்களை வழங்கி அப்பிராந்தியத்திற்கு சேவை செய்யக்கூடிய சகல வசதிகளையும் கொண்ட ஒரு வைத்தியசாலையாக உருவாக்குவதன் ஊடாக அப்பிராந்தியத்தில்

 வாழும் மூவின மக்களும் கண் வைத்திய சேவைகளை பூரணமாக பெற்றுக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாமல் அவசர சிகிச்சைப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு இரண்டையும் கொண்டு கிழக்கு மாகாணத்தில் ஒரு பிரதான கண் வைத்தியசாலையை பாலமுனையில் நிறுவுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

குறிப்பாக, எதிர்காலத்தில் தென்கிழங்குப் பல்கலைக்கழகத்திற்கு ஒரு மருத்துவபீடம் வருகின்ற போது அங்கு கல்வி பயிலும் மருத்துவ பீட மாணவர்களும் கண் வைத்தியம் சம்பந்தமான மருத்துவ கல்வியை வைத்தியசாலையிலே பெற்றுக் கொள்ளவும் முடியும்.

எனவே, பாலமுனை மாவட்ட வைத்தியசாலையை ஒரு கண் போதனா வைத்தியசாலையாக அமைப்பதற்கான அவசர ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன் எனத்தெரிவித்தார்.

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment