முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயகாவின் மறைவு பேரிழப்பாகும்.

முன்னாள் பிரதமர் ரட்னஸ்ரீ விக்ரமநாயகாவின் மறைவு நாட்டு மக்கள் அனைவருக்கும் கவலையளிப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது மறைவு நாட்டு மக்களுக்கே குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். 

லங்கா சம சமாஜக் கட்சியின் மூலம் தனது முதல் அரசியலை ஆரம்பித்த முன்னாள் பிரதமர் ரட்னசிறி விக்ரமநாயக இடதுசாரிச் சிந்தனையைக் கொண்டவர், 

ஒரு நேர்மையான அரசியல்வாதியாக 1962 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட அமரர் ரட்னசிறி விக்ரமநாயகா அரசாங்கத்தில் பல அமைச்சுப் பதவிகளை வகித்து அனைத்து மக்களின்  நலன்களுக்காகவும் காத்திரமான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது ஆட்சிக்காலங்களில் இருமுறை பிரதம மந்திரியாக பதவி வகித்த இவர் தன்னால் முடிந்த சேவைகளை நாட்டுக்கு ஆற்றியுள்ளதுடன், விவசாயிகளுக்கு பெரும் உதவிகளைச் செய்துள்ளார். அதில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சமாதானம் ஏற்படுத்துவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சி – பங்களிப்பு மிகமுக்கியமானவை. அதிலும் கடந்த காலங்களில் முஸ்லிம் விரோத செயற்பாடுகளின்போது நடுநிலை அரசியல்வாதியாக முஸ்லிம்கள் சார்பில் குரல் எழுப்பியிருந்தார். 

காலம் சென்ற முன்னாள் பிரதமரின் இழப்பினால் துயருறும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கின்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment