வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படமாட்டாது.

புதிய அரசியலமைப்பின் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படமாட்டாதென்றும் ஒற்றையாட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதெனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் மீன்பிடித்துறை அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார். மாத்தறை கோட்டேகொட பிரதேசத்தில் நேற்று அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். அமைச்சர் தொடர்ந்தும் கூறியதாவது:

அனைத்து தரப்பினரதும் கருத்துக்களை உள்வாங்கியே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுமே தவிர எவரும் நினைத்தப்படி இதில் மாற்றங்களை செய்ய முடியாது என்றும் அவர் கூறினார். அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நாடு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுவிடுமென ஒரு சிலர் புரளியை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதில் எவ்வித உண்மையும் இல்லை.புதிய அரசியலமைப்பின்படி நாடு ஒன்பது துண்டுகளாக பிரிக்கப்படமாட்டாது. வடக்கும் கிழக்கும் மீண்டும் இணைக்கப்பட மாட்டாது.அரசாங்கம் ஒருபோதும் "பெடரெல்" முறையை அறிமுகம் செய்யாது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தப்பட மாட்டாது. இதை மக்கள் நம்ப வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment