பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களில் அவர்களின் புகைப்படங்களை ஒட்ட நடவடிக்கை.

பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களில் அவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வாகனத்தில் பயணிப்பவர் பாராளுமன்ற உறுப்பினர் என்பதனை அடையாளப்படுத்தும் வகையில் இவ்வாறு வாகனங்களில் அவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட உள்ளன.

பெரிய வர்ணப் புகைப்படம் ஒன்று வாகனத்தின் முன் பக்கத்தின் ஓர் மூலையில் ஒட்டப்பட உள்ளதுடன், இரவு நேரங்களிலும் தெளிவாக அடையாளம் காணக்கூடிய வகையில் ஆகூலின் கடதாசியில் இந்தப் புகைப்படம் அச்சிடப்பட்டுள்ளது.

பிரதி சபாநாயகர் திலங்க சுமதிபாலவின் யோசனைக்கு அமைய இந்த புகைப்படங்கள் வாகனங்களில் ஒட்டப்பட உள்ளன. இதேவேளை, ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் இரண்டு புகைப்படங்கள் வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வகைப் புகைப்படம் ஒன்றுக்காக பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடமிருந்து ஆயிரம் ரூபா அறவீடு செய்யப்பட உள்ளது.

அடையாளத்தை உறுதி செய்யும் புகைப்படத்தை பெற்றுக் கொள்ள விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்திலிருந்து ஆயிரம் ரூபா அறவீடு செய்யப்பட உள்ளது.

இதுவரையில் சுமார் 200பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த புகைப்படத்தைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்வித தடையும் இன்றி, சுய கௌரவத்தை பாதுகாத்துக்கொள்ளக்கூடிய வகையில் வாகனத்தில் பயணம் செய்ய இந்த புகைப்பட முறைமை அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அண்மைய பாராளுமன்ற சுற்று வட்டத்தில் இடம்பெற்ற போராட்டமொன்றின் போது பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பு தரப்பினர் இடையூறு ஏற்படுத்தியதாகவும் தங்களது சிறப்புரிமை மீறப்பட்டதாகவும் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

இவ்வாறான நிலைமைகள் மீளவும் ஏற்படாமல் இருப்பதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு புகைப்படங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. பாராளுமன்ற உறுப்பினர்களின் வாகனங்களின் அரச இலச்சினைக்கு பதிலாக இனி வரும் காலங்களில் புகைப்படங்கள் ஒட்டப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. (டெய்லி சிலோன்)
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment