மாகாண சபைகளின் அதிகாரங்களை பறித்தெடுக்கும் சட்ட மூலத்தை ஆதரிக்க முடியாது.

(எம்.ஜே.எம்.சஜீத்)

மாகாண சபைகளுக்கு உச்ச அதிகாரங்கள் வழங்க கோரி நிற்கும் நாம் மாகாண சபைகளின் அதிகாரங்களை பறித்தெடுக்கும் அபிவிருத்தி விசேட ஏற்பாடுகளுக்கு சட்ட மூலத்தை ஆதரிக்க முடியாது என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் விசேட அமர்வு (23) தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாண முதலமைச்சரினால் கிழக்கு மாகாண சபையின் சிபார்சினை வேண்டி அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலம்;  சமர்;ப்பிக்கப்பட்ட போது உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள இச்சட்ட மூலம் அவரச அவசரமாக சமர்ப்பிக்கப்பட்டதனை நோக்கும் போது மாகாண சபைகளின் அதிகாரங்களை மாகாண சபையினைக் கொண்டே பறித்தெடுக்கும் நடவடிக்கையாக பார்க்க வேண்டியுள்ளது. எனவே இச்சட்ட மூலம்தொடர்பாக நமது உறுப்பினர்கள் நன்கு விளக்கங்களை அறிந்த நிலையில் விவாதத்திற்கு எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அபிவருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலம் ஊவா மாகாண சபையில் சமர்ப்பிக்கப்பட்ட போது ஆளும் கட்சியினால் தோற்கடிக்கபட்டுள்ளது. வட – கிழக்கு மாகாணங்களுக்காகவே மாகாண சபை முறைமை இந்த நாட்டில் உருவாக்கப்பட்டது. எங்களைக் கொண்டே எங்களின் அதிகாரத்தை இல்லாமல் செய்யும் இச்சட்ட மூலத்தை எல்லோரும் இணைந்து வரலாற்று தவறுகளை புரியாது இந்த விடயத்தை நாம் கவனமாக கையாள வேண்டும். குறிப்பாக கிழக்கு மாகாண மக்களின் உணர்வுகளை ஒற்றுமைப்பட்டு முன்னுதாரணமாக நமது நாட்டிற்கு காட்ட வேண்டிய தேவையுள்ளது.

மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் இருந்தால்தான் நமக்கு பின்வரக்கூடிய மக்கள் பிரதிநிதிகள் நமது மாகாண மக்களுக்கு சிறந்த சேவையினை வழங்கக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும். அண்மையில் பத்திரிகைச் செய்தி ஒன்றில் கிழக்கு மாகாண முதலமைச்சர் அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலத்திற்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சட்ட மூலம் தொடர்பாக நாம் விசேட கவனம் செலுத்த வேண்டும்.

இச்சட்ட மூலத்தின் ஊடாக நமது மாகாண சபையின் அதிகாரங்கள் பறிக்கப்படுமானால் இதனை நாம் எல்லோரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும் எனத் தெரிவித்தார். கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் துரைராசசிங்கம், மாகாண சபை உறுப்பினர் அன்வர், எதிர்க்கட்சி உறுப்பினர் டபிள்யு.டி.வீரசிங்க ஆகியோர்களும் இந்த சட்ட மூலம் தொடர்பான விவாதத்தில் கருத்துக்களை தெரிவித்தனர்.

அபிவிருத்தி விசேட ஏற்பாடுகள் சட்ட மூலம் தொடர்பாக நன்கு விளங்கிக் கொள்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது என்ற மாகாண சபை உறுப்பினர்களின் கருத்துக்களை ஏற்றுக் கொண்ட தவிசாளர் சந்திரதாச கலப்பதி எதிர்வரும் 2017.01.24ஆம் திகதி நடைபெறும் சபை அமர்வின் போது அச்சட்ட மூலம் தொடர்பான விவாதம் நடைபெறும் என அறிவித்துள்ளார் எனவும் உதுமாலெப்பை மேலும் தெரிவித்தார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment