இறைவனால் கூலி வழங்கப்படும் என்ற நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும்.

(எம்.ஜே.எம்.சஜீத்)

நல்ல எண்ணங்களுடன் அரசியல் தலைவர்களும், அதிகாரிகளும் மக்கள் நீண்ட காலமாக பயன்பெறும் அபிவிருத்தி திட்டங்களை நிறைவேற்றும் போது இறைவனின் கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார். 

அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் (26) நடைபெற்ற நிகழ்வொன்றின் போது கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய வேளையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் அரசியல் தலைவர்களையும், அதிகாரிகளையும் மக்கள் தங்களுக்குத் தேவையானவைகளைப் பெறுவதற்காக நாடிவருவார்கள். மக்களின் தேவைகள் நிறைவேறிய பின் அரசியல் தலைவர்களிடமிருந்தும், அதிகாரிகளிடமிருந்தும் தூரமாகி சிலவேளை எதிரிகளாகவும் மக்கள் மாறிவிடுவார்கள். 

ஆனால் எமது மக்கள் நீண்ட காலமாக நன்மை பெறக்கூடிய நல்ல அபிவிருத்திட்டங்களை நல்ல எண்ணங்களுடன் செயற்படுத்தும் போது இறைவனால் கூலி வழங்கப்படும்; என்ற நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும்.

குறிப்பாக இப்பிராந்தியத்தில் ஆயுர்வேத வைத்தியசாலையின் தேவை மக்கள் மத்தியில் மேலோங்கிய காலத்தில் அதன் அவசியத்தையும், அவசரத்தையும் அறிந்த தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாஉல்லா அவர்களினால் இவ்வைத்தியசாலை  முதன் முதலாக மத்திய மருந்தகம் என்ற பெயரில் திறந்து வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இவ்வைத்தியசாலைக்கான புதிய கட்டிடத்தை முன்னாள் அமைச்சர் அதாஉல்லா நிர்மானித்து தந்தார். நல்ல நோக்கத்தோடு  நல்ல எண்ணம் கொண்ட அரசியல் தலைவர்களால் தூர நோக்கு சிந்தனையுடன் ஆரம்பித்து வைக்கப்பட்ட இவ்வைத்தியசாலை இன்று தள வைத்தியசாலையாக தரம் உயர்ந்து நிற்கின்றது.

இதனைத் தொடர்ந்து இவ்வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகளுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ். சுபையிர் இரண்டு மாடிக் கட்டிடத்தையும் வழங்கினார். இவ்வைத்தியசாலையை தரம் உயர்த்தும் பணியையும் செய்தார். முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர்களான எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா, எம்.ஐ.மன்சூர் ஆகியோர்களும் இவ்வைத்தியசாலையின் நலனில் அக்கரை செலுத்தினார்கள். அவர்களையும் நாம் ஒருபோதும் மறந்துவிட முடியாது. இவ்வைத்தியசாலையின் வளர்ச்சியில் மேலும் கருசனை கொண்டு தற்போதைய கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர்; கவனம் செலுத்துவது மிகவும் சந்தோசமான விடயமாகும்.

அம்பாரை மாவட்டத்தின் ஆயுர்வேதத் துறையின் கேந்திர நிலையமாக திகழும் அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலை மக்களுக்கு சுதேச மருத்துவ சேவைகளை வழங்கி வருகின்றது. இவ்வைத்தியசாலையின் வளர்ச்சியில் ஆரம்ப காலத்தில் இருந்து அர்ப்பணிப்போடு செயல்பட்டு உதவிய கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யு.எல்.ஏ அஸீஸ், கிழக்கு மாகாண ஆயுர்வேத பணிப்பாளர் டாக்டர் தர்மராஜா, டாக்டர் சிரிதரன், டாக்டர் நபில், டாக்டர் நக்பர் ஆகியோர்களுக்கு மக்கள் சார்பில் பாராட்டுகின்றேன்.

இவ்வைத்தியசாலையின் சுதேச மருத்துவ சேவைகளில் அம்பாறை மாவட்ட மக்கள் நம்பிக்கை வைத்து சிகிச்சை பெறுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திய வைத்தியர்கள், அதிகாரிகள் எல்லோரையும் வாழ்த்துகின்றேன்.

இவ்வைத்தியசாலை கடந்து வந்த பாதைகள் என்ற விபரங்களை வெளியிட்ட விபரங்களில் இவ்வைத்தியசாலையின் ஆரம்ப வரலாறு தொடர்பான விபரங்கள் மறைக்கப்பட்ட நிலையில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்து நாம் கவலைப்பட வேண்டியுள்ளது. ஒரு விடயத்தின் வரலாற்றை தெரிவிக்கும் போது உண்மையான வரலாற்றுத் தகவல்களை தெரிவிக்க வேண்டும்.

அம்பாறை மாவட்டத்தில் மூலிகைத் தோட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கான ஏற்பாடுகளை அவசரமாக செய்ய வேண்டும். 2016ஆம் ஆண்டு சுகாதார அமைச்சின் வரவு – செலவு திட்ட விவாதத்தில் இக்கோரிக்கையினை நான் முன்வைத்தேன். இதற்கான அரச காணியினை பெற்று மூலிகைத் தோட்டங்களை இங்கு நாம் உருவாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் போது அம்பாறை மாவட்டத்திற்கான மூலிகைகளை இங்கிருந்து உற்பத்தி செய்யக்கூடிய நிலமை உருவாகுவதுடன் நமது மாவட்ட மக்களின் வாழ்வாதார, பொருளாதார வளர்ச்சிக்கும் பாரிய பங்கினை வழங்க முடியும்.

இவ்வைத்தியசாலைக்குரிய அம்புயலன்ஸ் வண்டி பழமை அடைந்த நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த வருட நிதியில் விசேட கவனம் செலுத்தி இவ்வைத்திசாலைக்கான புதிய அம்புயலன்ஸ் வண்டியினை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

35 பேர் உத்தியோகத்தர்கள் இவ்வைத்தியசாலையில் கடமை புரிகின்றனர். இவ்வைத்தியசாலை உயர்ந்து சுதேச வைத்திய துறையில் சாதனைகள் புரிவதனைப் பார்க்கின்ற போது பிள்ளைகள் சாதனைகள் பெறும் போதும் பெற்றோர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் பெறும் மகிழ்ச்சி அடைவது போன்று நானும் மகிழ்ச்சி அடைகின்றேன். இவ்வைத்தியசாலையின் நலனில் ஆரம்பம் தொடக்கம் இன்று வரை உதவி செய்த அனைவருக்கும் மக்கள் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

2004அம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரலையினால் நமது நாட்டில் 38 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களை இழந்ததுடன் கோடிக்கணக்கான சொத்துக்களையும் இழந்தோம். சுனாமிப் பேரலை காரணமாக மரணித்தவர்களுக்காக இறைவனைப் பிரார்த்திப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment