வீதியில் நாய்கள் மற்றும் மிருகங்களைக் கைவிட்டுச் செல்வோருக்கு 25,000 ரூபா அபராதம்.

நாய்களை வீதிகளில் கைவிட்டுச் செல்பவர்களிடம் 25,000 ரூபா அபராதம் அறவிடுவதற்கான தீர்மானம் தொடர்பில் தற்போது அதிகம் பேசப்படுகின்றது.
சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்களுக்கு அமைய, இலங்கையின் சனத்தொகையுடன் ஒப்பிடுகையில் நபரொருவருக்கு 7 நாய்கள் வீதம் காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

இந்த எண்ணிக்கையில் வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களும் உள்ளடக்கப்படுவதுடன், பெரும்பாலான நாய்கள் பாடசாலைகள், வைத்தியசாலைகள், பொது இடங்கள் மற்றும் வீதிகளில் வாழ்கின்றன.

கடந்த வருடம் விசர் நாய்க் கடியினால் 24 பேர் உயிரிழந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

இந்நிலையில், வீதியில் நாய்கள் மற்றும் மிருகங்களைக் கைவிட்டுச் செல்வோருக்கு 25,000 ரூபா அபராதமும் அதிகபட்சம் 6 மாத சிறைத்தண்டனையும் வழங்கும் திருத்தமொன்றைக் கொண்டுவரும் பிரேரணையை அமைச்சரவையில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளதாக உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

மேலும், பொது இடங்களில் காணப்படும் நாய்களை வேறு இடத்திற்குக் கொண்டு செல்லும் நடைமுறைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் பைசர் முஸ்தபா குறிப்பிட்டார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment