தெஹியத்தக்கண்டி ஆதார வைத்தியசாலைக்கு 20 மில்லியன் ரூபாய் மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு.

(எம்.எம்.ஜபீர்)

தெஹியத்தக்கண்டி ஆதார வைத்தியசாலைக்கு சுகாதாரத்துறை அமைச்சின் 20 மில்லியன் ரூபாய் செலவில்  மருத்துவ உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு இன்று தெஹியத்தக்கண்டி ஆதார வைத்தியசாலை வைத்தியட்சகர் டாக்டர் சுசந்த குணசிங்க தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு சுகாதாரத்துறை பிரதி அமைச்சர் எம்.சீ.பைசால் காசீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியபதி கலபதி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாக ஐ.எல்.எம்.மாஹிர், ஏ.எல்.தவம், ஆரிப் சும்சுதீன், டி.டி.மெத்தன் டி சில்வா, மஞ்சுளா பெர்னாண்டோ, நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின்  இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூர், வைத்தியர்கள், தாதியர்கள், அமைச்சின் உயர் அதிகாரிகள்  உள்ளி;ட்ட பலர் கலந்துகொண்டனர்.இதன்போது உடற்பயிற்சி பிரிவு, எண்டோஸ்கோபி பிரிவு, சீ.எஸ்.எஸ்.டி பிரிவு, ஸ்கேனர் இயந்திரம், கார்டியாக் மானிட்டர், பல் சிகிச்சை, மருத்துவ ஆய்வு கூடம், ஊசிகளை பம்ப் உள்ளிட்ட பல  மருத்துவ உபகரணங்களும் வைத்தியசாலைக்கு கையளிக்கப்பட்டது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment