கரவாகு இலக்கியச் சந்தி வழங்கும் ‘சோலைக் கிளி’ விருதுகள்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கரவாகு இலக்கியச் சந்தி ஏற்பாடு செய்த 2015இல் வெளிவந்த  கவிதை நூற்களில் சிறந்த நூலைத் தெரிவு செய்வதற்கான போட்டியில் முதல் பரிசான15,000 ரூபாய் பணப்பரிசு, ‘சோலைக்கிளி’ விருது மற்றும் சான்றிதழை மன்னார் அமுதன் எழுதிய ‘அன்ன யாவினும்’ என்ற கவிதை நூல் தட்டிச்செல்கிறது.

இந்நூற்களில், பாராட்டுப் பரிசும் மற்றும் சான்றிதழும் முறையே சு.தவச்செல்வன் (டார்வினின் பூனைகள்), ஏ.கே.முஜாரத் (சாத்தான் வழிந்தோடும் சொற்கள்),தம்பிலுவில் ஜெகா (விடை தேடி), பாலமுனை முபீத் (உடைந்த கால்கள்),ஓட்டமாவடி றியாஸ் முஹம்மத் (முகவரி இழந்த முச்சந்தி) என்ற 5கவிஞர்களின் நூல்களுக்கு கிடைத்திருக்கின்றது.

‘சோலைக்கிளி’ விருது விழாவிற்கு ஆர்வத்துடன் கவிதை நூல்களை அனுப்பிய ஏனைய அனைத்து கவிஞர்களுக்கும் கரவாகுச் சந்தி, சிறப்புச் சான்றிதழ்களை வழங்கவுள்ளது.

விழா எதிர்வரும் (25) சனிக்கிழமை காலை 9.15 இற்கு மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில் நடைபெறும்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment