எடின்பார்க்' விருதுபெறும் சாய்ந்தமருது ஜெ.எம்.பாஸித் !.

(எம்.எம்.ஜபீர்)

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மன்றத்தின்  தேசிய இளைஞர் விருது தொடர்பு பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள பிரித்தானிய நாட்டின் 'எடின்பார்க்' பல்கலைக் கழகத்தினால் வழங்கப்படும் சர்வதேச விருதுத் திட்டத்தில் பிரேவு இளைஞர் கழகத்தின் தலைவர் ஜெ.எம்.பாஸித், சர்வதேச 'வெண்கல' விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவ்விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் மார்ச் மாதம் 06ஆம் திகதி திங்கட்கிழமை மாலை 2.00 மணிக்கு கொழும்பிலுள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரி மாளிகையில்  இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் கௌரவ பிரதமர் ரணில் விக்கரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது எடின்பார்க் பல்கலைக்கழக பிரதிநிதிகளால் இவருக்கான விருது வழங்கப்படவுள்ளது. இளைஞர் ஆளுமை, தலைமைத்துவம் மற்றும் சமூக அபிவிருத்தி செயற்பாடுகளுக்காக இவருக்கு இவ்விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

மேலும் இவர் சாய்ந்தமருது பிரேவு இளைஞர் கழகத்தின் தலைவரும் மற்றும் முன்னாள் இளைஞர் கழக சம்மேளனத்தின் உறுப்பினமார். தேசிய ரீதியில்  இடம்பெற்ற இளைஞர் மாநாடுகளில்  மற்றும் பல்வேறு நிகழ்வில் பங்கேற்றவர்.  

மேலும் இவர் லெமன் ஹார்வெஸ்ட் என்டர்பிரைஸஸ் நிறுவனத்தின் நிருவக உத்தியோகஸ்த்தராக பணிப்புகின்றர்.  இவர் . சாய்ந்தமருது  அல்-கமறூன் , கல்முனை ஸாஹிறாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவர் ஆவர்.

இவ் விருதினைப் பெற்றுத்தர பல தியாகத்தினையும்,அர்பனிப்பையும் புரிந்த முன்னாள் இளைஞர் பாராளுமன்ற பிரதியமைச்சர் ஏ.எல்.எம்..றிஸான் அவர்களுக்கும் பிரேவு இளைஞர் கழகம் சர்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment