கிழக்கு மாகாணத்தில் வெள்ளிக்கிழமைகளில் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களை நடாத்த வேண்டாம்.

எம். ஜே. எம். சஜீத்

பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்கள் உரிய காலப்பகுதிக்குள் நடாத்தப்பட்ட வேண்டுமென கிழக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவரும், நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் பிரதி அமைச்சர் பைசல் காசீம் மற்றும் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ் உதுமாலெப்பை ஆகியோரின் இணைத்தலைமையில் (17) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லாவின் வேண்டுகோளுக்கினங்க நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களின் ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவராகவும், அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவராகவும் நான் ஜனாதிபதி அவர்களினால் நியமனம் செய்யப்பட்டுள்ளேன். அதற்காக ஜனாதிபதி அவர்களுக்கும், தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம் அதாஉல்லாவுக்கும் இச்சந்தர்ப்பத்தில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நிந்தவூர் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் பல மாதங்களுக்குப் பின்னர் நடைபெறுகிறது. இக்கூட்டமானது மாதாந்தம் நடாத்தப்பட வேண்டும். இதில் இப்பிரதேசத்தினுடைய அபிவிருத்திகள் மற்றும் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து தீர்வுகளை காணவேண்டும். ஆகவே வெள்ளிக்கிழமை தினங்களில் இவ்வாறான முக்கிய கூட்டங்களை நாத்துவதனை முதலில் நிறுத்த வேண்டும்.

வெள்ளிக்கிழமை ஜூம்ஆவுடைய தினம் என்பதனால் ஒரு பிரதேசத்தின் ஒட்டுமொத்த அபிவிருத்தி மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு நேரம் போதாமலுள்ளது. குறிப்பிட்ட சில மணி நேரத்துக்குள் இக்கூட்டங்களை நடாத்த முடியாது. அம்பாரை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களையும் வெள்ளிக்கிழமைகளில் நடாத்த வேண்டாமென நான் மாவட்ட அரச அதிபரிடம் கூறியுள்ளேன். எனவே இவ்வாறான முக்கிய கூட்டங்களை வெள்ளி தினங்களில் நடாத்த வேண்டாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment