வியாபார தந்திரம் ; உங்களது பொருட்களையே வாங்கும் படி வாடிக்கையாளர்களை பழக்கப்படுத்தி விடுங்கள்.

சில நிறுவனப் பொருட்களின் பிராண்டுகள் நாம் ஏன் தேர்தெடுத்து வாங்குகிறோம் என்று தெரியாமலே வாங்கி கொண்டிருப்போம். இத்தனைக்கும் அந்த பிராண்டுகளின் தரம் அதிகமென்றும், விலை குறைவென்றும் சொல்ல முடியாது. அந்த நிறுவனப் பிராண்டுகளுக்கு போட்டியாக வேறு நிறுவனப் பிராண்டுகளும் சந்தையில் உள்ளன. ஒருவேளை அந்த நிறுவனப் பொருட்களின் விளம்பரத்தின் தாக்கமாக இருக்கலாம், கடையில் எளிதாக கிடைப்பதாக இருக்கலாம், மற்றவர்கள் அந்த பொருட்களை வாங்குவதால் நாமும் அதையே தேர்தெடுக்கலாம். இவை எல்லாவற்றிக்கும் மேலாக அந்த நிறுவனங்கள் தங்களது பிராண்டை (Brand) வாங்குவதை நம்மிடம் ஒரு பழக்கமாக (Hibitual) மாற்றிவிட்டன.

உதாரணத்திற்கு நாம் உபயோகிக்கும் சோப்பு, எண்ணை, பற்பசை பல வருடங்களாக ஒரே பிராண்டை பயன்படுத்துவோம். இந்த பிராண்டை ஏன் உபயோகிக்கிறீர்கள் என்று யாரவது கேட்டால் அந்த நேரத்தில் ஒரு பதிலை உருவாக்கி விடுவோம், தரம் அதிகம், விலை மலிவு போன்றவை. இது நாம் வாங்குவதை நிரூபிப்பதற்க்கான பதில்களாக இருக்கும். பல நேரங்களில் எதையும் யோசித்து அந்த பிராண்டுகளை நாம் வாங்குவதில்லை, அதை வாங்குவதை நமக்கு பழக்கமாகி (Habitual) விட்டன அதனால் வாங்கிகொண்டிருபோம்.

இந்த மாதிரியான நிறுவனப் பொருட்களின் பிராண்டுகள் நமது ஆழ்மனதை குறிவைத்து உருவாக்கப்பட்டவை, சந்தைபடுத்தப்பட்டவை. இந்த பிராண்டுகள் நமது ஆழ்மனதை ஆதிக்கம் செலுத்தி நம்மை வாங்க வைக்கின்றன.

இதேபோல் பல வருடமாக ஒரே கடையில் பொருட்களை வாங்கி கொண்டிருப்போம், அதை மற்ற கடைகளையெல்லாம் ஒப்பிட்டு பார்த்து வாங்கிகொடிருப்பதில்லை. ஏனென்றால் அந்த கடைகளில் வாங்குவது நமக்கு பழக்கமாக ஆகிவிட்டது. நம்மால் பழக்கத்தை மாற்றுவது கடினம். பழக்கத்தை (Habitual) மாற்றுவதற்கு நமக்கு மிக வழுவான காரணம் தேவைப்படும். அந்த வழுவான காரணம் நமக்கு கிடைக்கும் வரை அதே கடைகளிலும், அதே பொருட்களையும்தான் வாங்கிகொண்டிருப்போம். வாடிக்கையாளர்கள் உங்கள் பொருட்களை வாங்குவதை ஒரு பழக்கமாக (Habit) மாற்றினால், அவர்கள் உங்கள் பொருட்களை வாங்குவதற்கு பழக்கப்படுத்தப்பட்டுவிடுவார்கள். 

பொருட்களை வாங்குவதை பழக்கமாக மாற்றுவதற்கு தரம், விலை, சேவை, விளம்பரம், நம்பிக்கை, நாணயம் போன்றவற்றை வாடிக்கையாளர்களின் ஆழ்மனத்தில் புகுத்துங்கள்.        

ஒரு பிராண்ட் (Brand) வெற்றிபெற வேண்டுமானால் முதலில் அது அடிமனதில் உள்ள சிந்தனைகளோடு ஒன்றிப்போக வேண்டும். பொருட்களின் பிராண்ட் பற்றிய ஆழ்மனப் பதிவுகள் அந்தப் பொருளை நம்மை அறியாமலேயே வாங்க வைத்துவிடுகின்றன.

தரம் உயர்ந்த, மலிவு விலை பிராண்ட்கள் சந்தையில் பல இருந்தும் அதை நாம் பயன்படுத்த தயங்குவோம். ஏனென்றால் நாம் உபயோகிக்கும் பிராண்டிற்கு பழக்கப்பட்டுவிட்டோம்.

விலை (Price), பொருள் (Product or Service), இடம் (Place), தொழில் முன்னேற்ற ஆக்க முயற்சி (Promotion) போன்றவற்றை 4Ps மார்க்கெட்டிங் கலவை (Marketing mix) என்பார்கள். இந்த மார்க்கெட்டிங் கலவையை (Marketing mix) வாடிக்கையாளர்களின் ஆழ்மனதில் புகுத்தி பழக்கமாக (Habit) மாற்றினால் நாம் சந்தைபடுத்துதலில் வெற்றி பெறலாம். 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment