தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமாகவே கருதப்படும்.

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியல் இருந்து நீக்குவதாக ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் அறிவித்துள்ள போதிலும், விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருக்கும் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் உள்ளடக்குவது குறித்த முறைமை பற்றிய சட்ட ரீதியான தீர்ப்பையே, நீதிமன்றம் வழங்கியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள ஐரோப்பிய ஒன்றியம் எனினும், பயங்கரவாத அமைப்பு ஒன்று தொடர்பிலான மதிப்பீடுகளை மேற்கொள்ளும் பொறிமுறைமையில் இந்த தீர்ப்பு எவ்வித தலையீடும் செய்யாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப் பகுதிக்கான மதிப்பீட்டின் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும், 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையிலான புதிய மதிப்பீடுகளின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு இந்த நீதிமன்ற தீர்ப்பு எந்த வகையிலும் தாக்கத்தை செலுத்தாது. எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கமாகவே ஐரோப்பிய ஒன்றியத்தினால் கருதப்படும். அதேவேளை, தற்போது நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு ஐரோப்பிய ஒன்றிய நிறுவனங்களினால் கிரமமாக மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படும். மிகவும் நிதானமாக இந்த தீர்ப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். இந்த வகையில் ஐரோப்பிய ஒன்றியம் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாகவே தொடர்ந்தும் கருதுவதாக ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment