இலங்கைப் பாராளுமன்றத்தின் சுவர்களைக் கேட்டுப் பாருங்கள்..!

இலங்கையில் எத்தனையோ புகழ்பூத்த கல்விமான்கள் அரசியல் தலைவர்களாக இருந்திருக்கின்றார்கள். பேர் பெற்ற குணவாதிகள் அரசியல் தலைவர்களாக இருந்திருக்கின்றார்கள். மிகப் பெரும் செல்வந்தர்கள் அரசியல் தலைவர்களாக இருந்திருக்கின்றார்கள். சபாநாயகர்களாக,நிதியமைச்சராக,வெளிநாட்டமைச்சராக,கல்வியமைச்சராகஇப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

அரசியல் வாழ்க்கைக்குப் பின் எத்தனையோ பேர் மிகப் பெரும் ராஜ தந்திரிகளாகப் புகழ் பெற்றிருக்கிறார்கள். கல்வித்துறையில் ,சட்டத்துறையில்,நிதித்துறையில்,வங்கியியலில்,மருத்துவத்தில் ,நிர்மாணத்துறையில்....இப்படிப் புகழ் பெற்ற விற்பன்னர்கள் இருந்திருக்கின்றார்கள்.

இவர்கள் எல்லோரும் இருக்க ...

எம் எச் எம் அஸ்ரப் மட்டும் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் ஒரு தலைவராக எப்படிப் பரிணமித்தார்...? ஆச்சரியமாக இல்லையா...?
நீதியரசர் அக்பர்,சபாநாயகர் பாக்கீர் மாக்கள், முதல் முஸ்லீம் சபாநாயகர் எஸ் எச் எம் இஸ்மாயில்,நிதியமைச்சர் நெய்னா முஹம்மத் ,கல்வியமைச்சர் கலாநிதி பதியுத்தீன் மஹ்மூத்,வெளிநாட்டமைச்சர் ஏ சி எஸ் ஹமீத்,சபாநாயகர் எம் எச் முஹம்மத்,நிர்மாணி வாப்பிச்சி மரைக்கார்,நிர்மாணி ஜிபிரி பாவா .....இவர்களோடு ஒப்பிடுகையில் அஷ்ரப் சாதாரண ஒருவரே... ஆனால் வரலாறு அஷ்ரப் அவர்களை இவர்களுக்கு ஒரு படி மேலே உயர்த்தி வைத்துள்ளதே ...! அது ஏன்...?

இலங்கைப் பாராளுமன்றத்தின் சுவர்களைக் கேட்டுப் பாருங்கள்..!

தாருஸ்ஸலாத்தின் கேட்ப்போர் கூடத்தின் சுவர்களைக் கேட்டுப் பாருங்கள்...!
இப்போதிருக்கும் தலைவரை,ஹஸனலியை,முழக்கம் மஜீத்தை,மன்சூரை,ஜவாத்தை,ராவுத்தர் நெய்னா முஹம்மதை,ஹாபீஸ் நசீர் அஹ்மதை....கேட்டுப் பாருங்கள்.. மருதூர்க் கனியின்,அலி உதுமானின்,மன்சூரின் ஆத்மாக்களை அல்லது அவர்களின் மண்ணறைகளைக் கேட்டுப் பாருங்கள்...! இல்லாவிட்டால் ...ஏ ஆர் எம் மன்சூரின் சம்மாந்துறை பி ஏ மஜீதின் மனசாட்சிகளைக் கேட்டுப் பாருங்கள்... அதுவும் இல்லாவிட்டால்...விடுதலைப் புலிகளினை..அவர்களின் மனசாட்சிகளினை கேட்டுப் பாருங்கள்.... ஜெ ஆர் ஜெயவர்த்தனாவின்,ஆர் பிரேமதாசாவின்,சந்திரிக்காவின்,ஸ்ரீமாவோ அம்மையாரின்....அஷ்ரப் பற்றிய பதிவுகளை படித்துப் பாருங்கள்... அதுவும் முடியாவிட்டால்...

கிழக்கின் கிராமங்களில் பலியான அப்பாவி சுஹதாக்களின் ஆத்மாக்களிடம் கேட்டுப் பாருங்கள்... இவர்கள் எல்லோரையும் விட வரலாறு ஏன் அவருக்கு அந்த இடத்தினை வழங்கி இருக்கிறது... அஷ்ரப் படிக்கப் பட வேண்டிய சரித்திரம்..!

அநியாயமாகப் பாவிகள் அவரைக் கொலை செய்தனர்...! மானுடத்தின் மனசாட்சி அவர்...! எரிக்கப்பட்ட யாழ் நூலகம் தமிழர்களின் மிகப் பெரும் இழப்பு...! கரிக்கப்பட்ட அஷ்ரப் இலங்கை முஸ்லீம் சமூகத்தின் மிகப் பெரும் பேரிழப்பு..! உங்கள் மனசாட்சி அழுகிறதா...? அஷ்ரபைத் திரும்ப தேடுகிறதா மனம்...? அவர் இனி வரமாட்டார்... ஆனால் அவர் வகுத்த அரசியல் பாதையின் ஆரம்பம் முதல் இறுதி வரைப் படியுங்கள் .... படிப்பினை பெறுவீர்கள்....!

றனுாஸ் மொஹமட் இஸ்மாயில்
முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்  - சம்மாந்துறை.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment