சம்மாந்துறை உடங்கா ஆற்றிற்கு குறுக்காகவுள்ள முஸ்தாக் அலி இறக்கத்திற்கான பாலத்தினை நிர்மாணிக்க நடவடிக்கை.

மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுவரும் கிராமிய பாலங்கனை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள உடங்கா ஆற்றிற்கு குறுக்காகவுள்ள முஸ்தாக் அலி இறக்கத்திற்கான பாலத்தினை சுமார் 03 கோடி ரூபா செலவில் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் மேற்கொண்ட முயற்சியின் பயனாக பாலம் நிர்மாணிக்கப்படவுள்ள பிரதேசத்திற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நயிமுத்தீன் இன்று (30) காலை கள விஜயம் மேற்கொண்டு குறித்த வேலையை துரிதமாக ஆரம்பிக்கும் பொருட்டு பார்வையிட்டார்.இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், கிழக்கு மாகாண சபை உறுப்பினரின் செயலாளர் வை.வீ.சலீம், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், வட்ட விதானைமார்கள் உள்ளிட்ட பிரதேச விவசாயிகளும் கலந்து கொண்டனர்.மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்து நாட்டின் நிதி உதவியில் முதற்கட்டமாக நாடு பூராகவும் 1210 கிராமிய பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இதன் மிகுதி பணத்தின் மூலம் இரண்டாம் கட்டத்தில் மேலும் 63 கிராமிய பாலங்கள் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் நிலையில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் கிழக்கு மாகாண சபையினூடாக விடுத்த வேண்டுகோளுக்கமைய உடங்கா ஆற்றிற்கு குறுக்காகவுள்ள முஸ்தாக் அலி இறக்கத்திற்கான பாலத்தினை சுமார் 03 கோடி ரூபா செலவில் நிர்மாணிப்பதற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.இந்தப் பாலத்தினை நிர்மாணிப்பதன் ஊடாக 5 விவசாய கண்டங்களிலுள்ள சுமார் 1500 ஏக்கர்களில் வேளாண்மைச் செய்கையில் ஈடுபடும் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் நன்மையடையவுள்ளனர்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment