வியாபாரத்தில் கதை சொல்லி உங்கள் பிராண்டை (Brand) உருவாக்குங்கள் - வீடியோ இணைப்பு

பல பேர்களுக்கு வெற்றி பெற்ற, சாதனை செய்த மனிதர்களின் கதைகளை (story) படிக்க பிடிக்கும். ஏனென்றால் அந்த கதைகளில் அவர்கள் சந்தித்த சவால்கள் மற்றும் கஷ்டங்கள், எப்படி சவால்களை சமாளித்தார்கள், அவர்கள் கண்ட தோல்விகள், தோல்விகளை தோற்கடித்து எப்படி வெற்றிப் பெற்றார்கள், அவர்களின் வெற்றி மந்திரங்கள், அவர்களிடமிருந்து கற்க வேண்டிய பாடங்கள் போன்ற ஊக்கமளிக்க கூடிய பல நேர்மறை விஷயங்கள் இடம் பெற்றிருக்கும்.

இதே போல் பல தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள் தங்களின் வெற்றி கதைகளின் மூலம் தங்கள் நிறுவனத்தை, தயாரிப்பை, தொழிலை, பிராண்டை பிரபலப்படுத்தியவர்கள் உண்டு. இன்றைய பல ஊடகத்தில் (media) பல தொழில்முனைவோர்கள் பற்றிய கதைகள் வெளிவருகின்றன. பல மேடைகளில் (platform) வெற்றி அடைந்தவர்கள் தங்கள் கதைகளை பகிர வாய்ப்பு கிடைக்கின்றன. இது மற்றவர்கள் வெற்றி பெற பயனுள்ளதாகவும் இருக்கிறது.

இதேபோல் தொழில் முனைவோர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் சாதனையாளர்கள் தங்களின் கதைகளை சொல்லியும் (storytelling), உருவாக்கியும் தங்களது நிறுவனத்தின் பிராண்ட் இமேஜ் (brand image) உருவாக்கலாம், பிரபலப்படுத்தலாம் மற்றும் விளம்பரப்படுத்தலாம்.

இவ்வாறு தொழில் முனைவோர்கள், சாதனையாளர்கள் தங்களது கதைகளை சொல்ல மற்றும் படைக்கும் போது பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை பார்க்கலாம்.

அமைப்பு (Context):

எந்த ஒரு கதைக்கும் உரை (text), உள்ளடக்கம் (content) மற்றும் வாக்கியம் என்பது ஒரு உயிரோட்டம் போன்றது. இதை எப்படி அமைக்கிறோம் என்பதை பொறுத்தே படிப்போரின் கவனத்தை ஈர்க்க முடியும். சொல்லும் கதைகளுக்கு உள்ளடக்கம், உரை மற்றும் வாக்கியம் நன்றாக அமைக்க வேண்டும்.

கதைகள் கேட்போரின், படிப்போரின் கவனத்தை இருப்பதாய் (grabs attention), உற்சாகத்தை உருவாக்கும் விதத்தில் (generates excitement), சுவாரஸ்யமானதாகவும் (interesting), கதையில் நம்பகத் தன்மை மற்றும் உண்மை தன்மை  கொண்டதாய் (true story), தேவையான பின்புலம் (necessary background) இருப்பதாய் அமைய வேண்டும்.

4 கேள்விக்கு பதில் அளிக்கவேண்டும்

1.  எங்கே மற்றும் எப்பொழுது (where & when) : வாழ்க்கை பயணம், தொடக்கம், சம்பவம், வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி போன்ற கதை சார்ந்த சம்பவங்கள் எங்கே மற்றும் எப்பொழுது நடந்தது என்பதை குறிப்பிடவேண்டும்.

2 . முக்கிய கதாபாத்திரம் யார் (Who is the main character?): கதையின் முக்கிய கதாபாத்திரம் யார் என்பதை அழுத்தமாக பதிவு செய்ய வேண்டும்.

3.  What does the character want? கதையின் பாத்திரம் என்ன சாதிக்க விரும்பினார், அவரின் குறிக்கோள், நோக்கம் (objective) என்ன என்பதை விளக்க வேண்டும். Facebook நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க்  “உலகம் முழுவதும் இணைக்கப்படவேண்டும் மற்றும் வெளிப்படையாக உருவாக்க வேண்டும்” என்ற குறிக்கோள் வாசகத்தை அடிக்கடி குறிப்பிடுவார்.

4. Who and what is getting in the way?  யார் மூலம் மற்றும் என்ன தடைகள் (barriers), தடங்கல்கள் (obstacles) ,பின்னடைவுகள் (setbacks), தோல்விகள், போராட்டங்கள் (battle), பெற்ற வலிகள் (pain), புறக்கணிப்புகள், சவால்கள் (challenge) போன்றவைகள் இடம்பெற வேண்டும்.

நடவடிக்கைகள் (Action)

சவால்களை எப்படி சமாளித்தோம், வெற்றி பெற என்ன நடவடிக்கைகள் (action) எடுத்தோம் போன்றவற்றை கதைகளில் தொகுக்க வேண்டும்.

முடிவு (Results)

கதையில் கதாபாத்திரத்தின் முடிவை குறிப்பிடவேண்டும். வெற்றி பெற்றார்களா அல்லது தோல்வியடைந்தார்களா, என்ன அடைந்தார்கள், எவற்றை பெற்றார்கள். போன்ற ஹீரோவின் முடிவுகளை கொடுக்க வேண்டும்.

எளிமையாக இருக்கவேண்டும் (simple)

கதைகள் மிகவும் எளிமையாக இருக்க வேண்டும். எளிதில் மற்றவர்கள் நினைவில் கொள்ளும்படியும் இருக்க வேண்டும்.

காதலுடன் கதை சொல்லுங்கள் (Tell Story with Passion)

கதைகளை சொல்லும் போது மிகுந்த காதலுடன் சொல்லவேண்டும். ரசித்து, ருசித்து கதைகளை கூற வேண்டும்.

ஊக்கமளிக்க  கூடியதாக  இருக்க  வேண்டும்

ஊக்கத்தை தராத எவரின் கதையை நாம் மனதில் நிறுத்தி கேட்ப தயாராக இருப்பதில்லை. எவரின் கதை நமக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும், ஒரு தூண்டுதல்களையும் அளிக்கிறதோ அவர்களின் கதைகளை கேட்க, படிக்க அனைவருக்கும் பிடிக்கும்.

அந்த கதைகள் ஏற்படுத்தும் ஊக்கம் நம் மனதில் நீண்ட நாட்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். நிச்சயம் அந்த வெற்றியாளரையும், அவரின் சாதனையையும் அவர் சார்ந்த துறையையும் நம்மால் மறக்க முடியாது. இதேபோல் ஒரு தொழில்முனைவோரின் வாழ்க்கை கதை மற்றவர்களுக்கு ஊக்கத்தையையும், உத்வேகத்தையும், தூண்டுதல்களையும் கொடுக்குமாறு படைக்க வேண்டும்.

கதை சொல்லுதல் (storytelling) நிச்சயம் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக இருப்பது மட்டுமல்லாமல் தங்களது பிராண்ட் இமேஜ் (brand image) யும் உயர்த்தும்.



Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment