தெரு விளக்குகளுக்கும், மூக்கு கண்ணாடிகளுக்கும் நாம் அம்பாரை யின் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்தோம்


அஸ்மி அப்துல் கபூர்.

ஞானசாரவின் கெடுபிடிகள் மகிந்த அரசில் ஏற்பட்டவுடன் நாம் உடனடியாக கொதித்தெழுந்து ஒன்றுபட்டு அந்த ஆட்சியை மாற்றி நல்லாட்சியை கொண்டு வந்தோம்..முஸ்லீம்கள் ஒன்றுபட்டு உருவாக்கிய ஆட்சி, இன்று கிழக்கு முஸ்லீம்களின் இதயம் அம்பாரை யின் 10000 ஏக்கர் நிலம் கல்முனை,ஒலுவில், பொத்துவில் என திகவாபி க்கு சொந்தமானதாக தயாகமகே கூறினார்.

மாயக்கல்லியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது 86 இடங்களில் புத்தர் சிலை வைக்க போவதாக அரச வர்த்தமானி அறிவித்தல் இவையெல்லாம் நிகழ நாம் வாக்களித்தனுப்பியவர்களும் காரணம், அன்று உண்மையை கூறி உங்களிடம் யதார்தத்தை பேசியதற்க்காக அதாஉல்லாஹ் எனும் ஆளுமையின் அதிகாரம் பறிக்கபட்டமையால் ஏற்பட்ட நிர்பந்தங்களை ஒருமுறை மீட்டு பார்க்க முடியும்.

ஞானசார தேரரை அரச அமைச்சர்கள் காப்பாற்றி ராஜமரியாதை முஸ்லீம்களின் பல கோடி பெறுமதியான சொத்துகள் எரியூட்டப்பட்டது
தேவையேற்படும் போது மீள எடுத்து திருப்பி வைக்கப்படும் வசீம் தாஜூதீன் கொலை விவகாரம் வடக்கில் முஸ்லீம்கள் மீள குடியேற முடியாத துர்பாக்கிய நிலை மாமனிதரின் கனவு நகரம் : கடலால் காவு கொள்ளப்படுகிறது ஒலுவில் வட்டமடு விவசாய நிலம் இதுவரை பலி கொண்ட வரலாறு போக எம்மவர்கள் புக முடியவில்லை கரும்புச்செய்கை காக பலவந்தமாக எமது விவசாயிகளிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலம் கையளிக்கப்படவில்லை.

பொத்துவில் தனியான கல்வி வலயம் கிடப்பிலே போடப்பட்டிருக்கிறது
நுரைச்சோலை சவூதி அரேபியா வீட்டுத் திட்டம் முற்புதர் காடுகளாக மாறிக் கிடக்கிறது சுயநலத்துக்காக தடுக்கப்பட்ட சாய்ந்தமருது மருதமுனை உள்ளூராட்சி மன்றங்களுக்காக கூட்டாக இருந்து சதி செய்து தடுத்தவர்கள் இன்று பிரிந்து நின்று முயற்சிக்கிறார்கள் புட்டம்பை துரத்தப்பட்ட முஸ்லீம்களின் நிலம் பற்றிய பேச்சுக்கே இடமில்லை.

இன வன்முறையால் கொல்லப்பட்டோர் காயமடைந்தோர் ஆனாதையானோர் கணக்கிலெடுக்கவில்லை இது அம்பாரையில் உள்ள பிரச்சினை இவற்றுக்கு மேலதிகமாக அடிக்கடி சொல்லும் கரையோர மாவட்டம் தென்கிழக்கலகு சுயாட்சி நிலப்பரப்பு தம்புள்ளை பள்ளிவாசல் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் மாற்று இடம் தருவதாக சொன்னார்கள் கிளர்ந்தெழுந்தோம் இப்போது மாற்று இடத்திலே கட்டப்படுகிறது நாம் மெளனம் பாத்தியா மாவத்த பள்ளிவாசலின் அனுமதி ரத்தாகி இருக்கிறது.

மகியங்கனை யில் தொடரான பிரச்சினை குர்ஆனை அவமதிக்கும் ஞானசார வும் அவர்தம் கூட்டமும் இவ்வாறு பொதுவான பிரச்சினைகள் வடக்கில் முஸ்லீம்களை குடியமர்த்த நடக்கின்ற மிகப் பெரிய அரசியல் சமர் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் இன்னமும் கையளிக்கபடாத எமது மக்களின் வாழ்விடங்கள் தொடரும் எமது துயர நிலை
ஆர்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்திதான் நாம் இவற்றை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் எதற்க்காக தலைவர்களென்று தலையிலே தூக்கி வைத்து கொண்டாடுகிறோம் நல்லாட்சி என்பதை உருவாக்கியதில் நூறு வீத பங்களிப்பு எம்முடையதல்லவா? அப்படியாயின் இவர்களால் பேச முடியாது
இவர்கள் நல்லாட்சியில் பதவிக்காக சோரம் போய் விட்டார்களா?

இன்னும் எவ்வளவு காலம்தான் இந்த பிரச்சனை களை வைத்து நாடகமாட போகிறார்கள் அபிவிருத்தி அரசியல் என்றால் வெறும் நாற்பதாயிரம் வாக்குகளுடன் அதாஉல்லாஹ் செய்யாததா?

தமிழ் தேசியத்துடன் நட்பு பாரட்டி வடகிழக்கு இணைப்பு பற்றி பேசுபவர்கள் ஆகக் குறைந்தது எமக்கு அவர்களுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்வுக்கு வழி செய்வார்களா?

ஏன் என்று நீங்கள் ஒரு போதும் உணரமாட்டீர்கள். நீங்கள் அந்தந்த நேரங்களில் உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு அரசியலால் மழுங்கடிக்கப்படுகின்ற ஒரு வகையான நிலையில் வாழ்கிறீர்கள் உங்கள் தெரிவுகளை நீங்களே முன்வையுங்கள் தலைவர்களை மாற்றியமைக்க போவதாக சொல்லுங்கள் விடை கிடைக்கும் தனக்கு கிடைத்தால் போதுமன்று இருந்தால் சுயநல அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து இந்த தேசியத்தை மீட்க முடியாது, .
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment