முன்னாள் அமைச்சர் கலாநிதி ஏ.ஆர். மன்சூர் காலமானார்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முன்னாள் அமைச்சர் அப்துல் ரஸ்ஸாக் மன்சூர் கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று(25)செவ்வாய்க்கிழமை சற்றுமுன்னர் காலமானார்.

வணிக மற்றும் கப்பல்துறை முன்னாள் அமைச்சரான அவர்குவைத் நாட்டுக்கான இலங்கைத் தூதவராகவும் பணிபுரிந்துள்ளார்.  
  
கல்முனை மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக அயராது பதினேழு வருடங்கள் உழைத்தநேர்மையான ஒழுக்கமான அரசியல் தலைமையாக 
ஏ. ஆர். மன்சூர் விளங்கினார்.


இவர்நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சரின் இணைப்பு செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளருமான ரஹ்மத் மன்சூரின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது ஜனாஸா கொழும்பு திம்பிரிக்கஸ்யாயவில் வைக்கப்பட்டுள்ளதோடு,இன்று (25) செவ்வாய்க்கிழமை மாலை அவரது சொந்த ஊரான கல்முனைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.




Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment