காணி, சுகாதார பிரச்சினைகளை தீர்க்க கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஆளுநரிடம் கோரிக்கை.

சப்னி அஹமட்-

கிழக்கு மாகாண சுகாதார, பாதுகாப்பு, காணி மற்றும் கல்வி தொடர்பாக அதிக கரிசனையுடன் அதிகார பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தார்.

கிழக்கு மாகாணத்தில் சுகாதார அமைச்சுக்கு நிறைந்துள்ள சவால்கள் தொடர்பாக கிழக்கு மாகாண சுகாதர அமைச்சர் ஏ.எல். முகம்மட் நஸீர் நேற்று (22) கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் ரோஹித்த போகல்லாகமையை தனது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொண்டார்.

குறித்த சந்திப்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முகம்மட் நஸீரினால், கிழக்கு மாகாண தனது அமைச்சுக்களை பொறுப்பெடுத்ததிலிருந்து தீர்க்க முடியாமல் சில பிரச்சினைகள் காணப்படுகின்றதாகவும் அவைகளை ஆளுநர் என்ற அடிப்படையில் சில நடைசிக்கலில் உள்ள குறைபாடுகளை தீர்பதற்கான கோரிக்கைகளை மேற்கொள்ளுமாறும், சிறுபான்மை சார் காணி மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு சவாலாக உள்ள ஆளனிப்பிரச்சினைகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவது தொடர்பாகவும், வைத்தியர்கள் பற்றாக்குறை தொடர்பாகவும், அரசியலமைப்பில் அதிகாரம் இல்லாத நிலையில் பல விடயங்களை முன்னெடுப்புக்களை மேற்கொள்ள முடியாமை தொடர்பாகவும் இங்கு ஆளுநரிடம் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து அது தொடர்பாக அதிக ஆர்வம் காட்டி சில பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்.

மேலும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்திகளை ஆரம்பித்து வைப்பது தொடர்பான ஆராய்வுகளும் இதன் போது மேற்கொள்ளப்பட்டது
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment