இந்தியாவின 14 வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்பு.

இந்தியாவின 14 வது குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் இன்று பதவியேற்கவுள்ளார் பதவியேற்பு விழாவிற்கான ஏற்பாடுகள் இந்திய நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடக்கதக்கது.
இந்தத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமார் ஆகியோர் போட்டியிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்திய ஜனாதிபதி தேர்தல் 17 ஆம் திகதி நடைபெற்று முடிவுகள் கடந்த 20 ம் திகதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று (25) பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
தற்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தமையினையடுத்து அவர் நேற்று தனது நாட்டு மக்களிற்கு உரையாற்றியுள்ளார்.
இந்த நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர்கள் மன்மோகன்சிங், தேவகவுடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாடாளுமன்றம் கோவில், மக்களுக்கு சேவை செய்வது தான் எனது விருப்பம். கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் மொழி ஆகியவற்றின் பெருக்கம்தான் இந்தியாவின் சிறப்பு எனவும் ஜனாதிபதி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஐந்தாண்டு பதவிக்காலத்தில் ஒரு மனிதாபிமான மற்றும் மகிழ்ச்சியான நகரத்தை உருவாக்க முயற்சித்ததாகவும் ஏழை மக்களின் வளா்ச்சிக்காக நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக புதிய குடியரசுத் தலைவராக இன்று பதவியேற்கவுள்ள ராம்நாத் கோவிந்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment