மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களை செலுத்த 2019ஆம் ஆண்டு 3.2 ட்ரில்லியன் ரூபா தேவை.

மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடன்களை மீளச் செலுத்த 2019ஆம் ஆண்டு 3.2 ட்ரில்லியன் ரூபா தேவைப்படுவதாக அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வெளிநாட்டுச் செலாவணி சட்டமூலம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் பதவியேற்ற பின்னர் பல்வேறு குப்பைமேடுகளைத் தனது தோள்களில் சுமக்கவேண்டி ஏற்பட்டது. சர்வதேச அரங்கிலிருந்து மனித உரிமைப் பிரச்சினை, பாரிய கடன்சுமை, ஊழல் மோசடி, குப்பைப் பிரச்சினை என பல்வேறு குப்பைமேடுகளை சுமக்கவேண்டி ஏற்பட்டது.

கடந்த ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் எவருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது. எனினும், ராஜபக்‌ஷ குடும்பத்தில் வீடு வாங்கியமை, கறுப்புப் பணப் புழக்கமென 3.1 பில்லியன் ரூபா பெறுமதியான மோசடி குறித்த தகவல்கள் நீதிமன்றத்துக்கு வழங்கப்பட்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. எனினும் வெளிநாட்டில் மறைத்துவக்கப்பட்ட நிதி தொடர்பான விபரங்களைப் பெறமுடியாதுள்ளது.

நாட்டின் கடன்சுமைகளுக்காக இந்த வருடத்தில் அரசாங்கம் 2085 மில்லியன் டொலர்களைச் செலுத்தியுள்ளது. இதில் 72 வீதம் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெறப்பட்ட கடன்களுக்கான கொடுப்பனவாகும். 2019ஆம் ஆண்டாகும்போது வருடத்துக்கான கடன் மீள் கொடுப்பனவுக்காக 3.2 ட்ரில்லியன் ரூபா தேவைப்படுகிறது. இதில் 82 வீதமானது கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பெறப்பட்டதாகும். இது வருமானத்தைவிட மூன்று மடங்கு அதிகமானதாகும்.

2020ஆம் ஆண்டாகும் போது 3752 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தவேண்டியிருக்கும். 2022ஆம் ஆண்டு தலையைத் தூக்க முடியதாளவுக்கு கடன்பெறப்பட்டுள்ளது. சுமனதாச சொன்னமைக்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, ஜனாதிபதி தேர்தலை முற்கூட்டியே நடத்தினார். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றால் ஏகாதிபத்திய ஆட்சியை ஏற்படுத்துவதும், சர்வதேச நாடுகள் பொருளாதார தடைகளைக் கொண்டுவரும்போது நாட்டு மக்களை ஒடுக்கி அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதென்றும் மஹிந்த திட்டமிட்டிருந்தார்.

எனினும், ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்பட்டு நாடு பொருளாதார நிலைமையில் முன்னேற்றப்பாதைக்கு இட்டுச் செல்லப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் எமது நிதி நிலைமைகளின் பலத்தை அறிந்து உதவி வருகிறது என்றார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment