அப்பாந்தோட்டை மக்கள் மீதான கோபம் காரணமாகவே துறைமுகத்தை சீனாவுக்கு அரசு தாரைவார்த்துள்ளது.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை அரசால் நடத்தக்கூடியதாக  இருந்தது. அவ்வாறு இல்லையெனில் இந்தத் துறைமுகத்தை மூடியிருக்கலாம். அப்பாந்தோட்டை மக்கள் மீதான கோபம் காரணமாகவே இந்தத் துறைமுகத்தை சீனாவுக்கு அரசு தாரைவார்த்துள்ளது.”

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்குக் குத்தகைக்கு வழங்கும் ஒப்பந்தம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைக் கூறினார்.

“ஜூலை 29ஆம் நாளை ஒரு துரதிஷ்டமான நாள். இந்திய – இலங்கை உடன்பாட்டில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கையெழுத்திட்டு, 30 ஆவது ஆண்டில், அதே நாளில் அவரது மருமகன் அம்பாந்தோட்டை – மாகம்புர துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் உடன்பாட்டில் கையெழுத்திட்டமை துரதிஷ்டமானது. ஜூலை 29ஆம் நாளில் பல துர்நிகழ்வுகளை நாடு கண்டிருக்கின்றது. இது நாட்டுக்கு நல்லதல்ல”  என்று அவர் மேலும் தெரிவித்தார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment