Multi Knowledge ஆண்ட்ராய்டு (Android) செயலி சம்மாந்துறையைச் சேர்ந்தவரால் உருவாக்கம்.

உலகம் இன்று தொடர்பாடல் மூலம் சுருங்கி விட்டதாகவும், கிராமமாக மாறிவிட்டதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் நவீன தொடர்பாடல் விருத்தியானது உலகை ஒரு வீடாக மாற்றியுள்ளது. அதாவது உலகில் நடக்கும் சகல நிகழ்ச்சிகளும் வீட்டிலுள்ள அனைவருக்கும் உடனுக்குடன் தெரிந்துவிடும். இந்த அமைப்பே இன்று உலகில் ஏற்பட்டு வருகிறது.

உலகில் எப்பாகத்தில் நிகழும் விடயமானாலும் உடனுக்குடன் தொடர்பாடல் மூலம் இன்று உலகம் முழுவதும் பரவி விடுகிறது. அந்தவகையில் இன்று MBNSOFT நிறுவனத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் Multi Knowledge ஆண்ட்ராய்டு (Android) மென்பொருள்  உலகை ஆளுவதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளில் பொது அறிவு, நுண்ணறிவு, பொது உளச்சார்பு, தகவல் தொழில்நுட்பம்,  உயர்தர பொதுச் சாதாரண பரீட்சைக்குரிய கடந்தகால வினாக்கள், வாராந்த தகவல்கள், புதிர்கள் மற்றும் பரிசுகளை அள்ளித்தரும் அறிவுப்போட்டிகள் நிகழ்சிகள் என பல்வேறு சிறப்பம்சங்களோடு இம்மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் எமது நாட்டில் நடைபெறும் போட்டிப்பரீட்சைகளுக்குரிய வினாக்கைளையும் இலகுவாக பெறமுடிவதுடன் இம்மென்பொருளை பயன்படுத்துவதன் மூலம் பூரண அறிவைப்பெற்று Grand Master ஆகத்திகழ முடியும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

Multi Knowledge 1.2 பதிப்பானது Google Play Store யில் வெளியிடவில்லெயன்றும் இதன் அடுத்த பதிப்பே Play Store க்கு பரிந்துரைக்கப்படுவதாகவும் அது மிகவிரைவில் வெளியிடப்படும் எனவும் அதுவரைக்கும் கீழுள்ள இணைப்பின் மூலம் இம்மென்பொருளைப் பதிவிறக்கம் செய்யமுடியும் என அந்நிறுவனத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

குறிப்பிட்ட மென்பொருள் அம்பாறை மாவட்டத்தின்  சம்மாந்துறையைச் சேர்ந்த MB. நஷாட் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் மொழிமூலம் கல்விசார் நடவடிக்கைக்காக தயாரிக்கப்பட்ட எமது நாட்டின் முதலாவது மென்பொருள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment