செல்ஃபியினால் அதிக உயிராபத்தை சந்திக்கும் நாடுகளில் இந்தியா முதலிடமாம்.

செல்ஃபி மோகத்தால் கண்ட இடத்தில் நின்று அடிபட்டு உயிரிழப்போர் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறதாம்.

செல்பி மோகம் பிடித்து ஆடாதவர்களே இல்லை. நின்றால் செல்பி. உட்கார்ந்தால் செல்பி. ஏன் தும்பினால் கூட செல்பி என்று இந்த செல்பி மோகம் பிடிக்காதவர்கள் மிக மிகக் குறைவே. இந்த செல்பி மோகம் தலைவர்களை, ஏன் இந்திய பிரதமரையே கூட விட்டுவைக்க வில்லை. போகும் இடமெல்லாம் செல்பி எடுத்து அப்லோட் செய்வதே ஒரு வேலையாகவும் வைத்திருப்பவர்களும் உண்டு.

இதில், பிரபலங்களுடன் செல்பி எடுக்கிறேன் பேர்வழி என்று காரில் ஃபாலோ செய்து, ஓவர்டேக் செய்த, குறுக்கே வண்டியை நிறுத்தி வலுகட்டாயமாக செல்பி எடுப்பது என்பது இன்னொரு பக்கம்

நடை பயணத்தில் முக்கிய தலைவர் ஒருவரை வழிமறித்து செல்பி எடுத்த ஆட்டொ டிரைவரை அவர் அறைய விவகாரம் பெரிதாக நான் சும்மா தட்டினேன் என்று சொல்லி பின்னர் அதே ஆட்டோ டிரைவரை அழைத்து வேண்டிய அளவு செல்பி எடுத்து அனுபினார்.

அமெரிக்கா சென்றுள்ள ரஜினியை கூட செல்பி மோகம் பிடித்து ஆட்டுகிறது. காரில் போவதுபோல் செல்பி எடுத்து அனுப்புகிறார்.

பிரபலங்களே இப்படி இருக்கும் போது இளைஞர்கள் எப்படி இருப்பார்கள்? நாம் எல்லாம் பிரபலத்தைப் போல வாழத்தானே ஆசை.

செல்பி எடுக்கிறேன் என்று கிணற்றின் மீது நின்று நான்கு மாணவர்கள் தவறி விழுந்து பலியானார்கள். ரெயில் முன் செல்பி எடுத்து உயிர்விட்டவர், மலைமேல்நின்று செல்பி எடுத்து உயிரை விட்டவர், அவ்வாளவு ஏன் பாம்பு கூடலாம் செல்பி எடுக்குறாங்க! என இதனால் உயிரிழப்போர் இந்தியாவில் தான் அதிகமாம்.

செல்ஃபி மோகத்தால் உயிரிழப்போரின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிக்கிறது என கார்னிஜி பல்கலைக்கழகம் மற்றும் இந்திரபிரசாதா கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

2014 � 2016-ஆம் ஆண்டில் நடந்த செல்ஃபி மரணத்தை ஆராய்ந்ததில், 127 மரணங்களில் 76 பேர் இந்தியாவில் மரணித்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவை தொடர்ந்து ரஷ்யா 2-வது இடத்திலும், அமெரிக்கா மூன்றாவது இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் சீனா கடைசி இடத்தில் உள்ளது. சீனாவில் தான் ஃபேஸ்புக், கூகுள் போன்றவற்றிற்கு தடையாச்சே. அங்க செல்பி எடுத்து எங்க போடுவது. சீனாக்காரர்கள் உஷாராதான் இருக்காங்க.

செல்ஃபி எடுப்பதின் முக்கிய காரணமே சமூக வலைதளமான பேஸ்புக்கில் அதிக லைக் பெறனும் என்பதே. லைக் வாங்குவதை விட உயிர் முக்கியம் என்பது அத்தருணத்தில் அவர்களுக்கு தெரிவதில்லை. இப்போவாச்சி தெரிஞ்சிக்குங்க செல்பியை விட லைஃப் முக்கியம்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment