உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த Subway Restaurants யினை உருவாக்கிய ப்ரெட் டிலூகா கூறும் 15 அறிவுரைகள்.

40000 த்திற்கும் மேற்பட்ட  உலகின் மிகப் பெரிய சங்கிலி தொடர் உணவகத்தை (World’s Largest restaurant chain) கொண்டுள்ளது Subway Restaurants (சப்வே) Subway Restaurants—ஐ தொடங்கியவர் Fred Deluca (ப்ரெட் டிலூகா) .2012-ல் இந்த நிறுவனம் ஈட்டிய வருமானம் 18.1 பில்லியன் டாலர். இத்தனை வளர்ச்சிப் பெற்ற நிறுவனம் வெறும் ஆயிரம் டாலர் மட்டுமே முதலீடாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது என்பதுதான் வியப்பு!.

Fred Deluca(ப்ரெட் டிலூகா) தனது தொழில் அனுபவங்களைகொண்டு தொழில்முனைவோர்களுக்காக START SMALL FINISH BIG அதாவது  சிறியதாய் தொடங்கி பெரியதாய் முடியுங்கள் என்ற நூலை எழுதியுள்ளார். அந்த நூலில் தொழில்முனைவோர்கள் வெற்றி பெறுவதற்கான உங்கள் தொழிலை வெற்றிகரமாக நடத்த  15 படிப்பினைகள் (15 key Lessons)  என்று அவர் தன் அனுபவங்களைப் படைத்துள்ளார்.

Fred Deluca (ப்ரெட் டிலூகா) -ன் 15 படிப்பினைகள் (15 key lesson to start & run your own successful business.

1.சிறியதாக ஆரம்பியுங்கள். ஆரம்பிக்காமலே  இருப்பதற்கு சிறியதாகத் தொடங்குவது பரவாயில்லை (Start small. It’s better than never starting at all).

2.சிறிய லாபத்தில் தொடங்குங்கள் .இது மிகப்பெரிய லாபத்தை ஈட்டுவதற்கான  சிறந்த பயிற்சியாகும் (Earn a few pennies . It’s good practice before earn those Dollars).

3.யோசனையோடு  தொடங்குங்கள் (Begin with an Idea).

4. ஒரு தீர்க்கதரசிப் போல் சிந்தியுங்கள்.எப்போதும்  பெரிய கண்ணோட்டத்தோடு பாருங்கள் (Think like a visionary. Always look for the Big Picture).

5 உங்கள்மீதும்  உங்கள் தொழில்மீதும்  நம்பிக்கை  வையுங்கள் (Believe in Yourself and Your business. Keep the faith).

6.தயாரானதுமே சுட்டுவிடுங்கள். தயங்கினீர்கள் என்றால் எப்போதும் சுடமாட்டீர்கள் (Ready,Fire,aim! If You think too much about it, You may never).

7. செலவை குறையுங்கள், விற்பனையை அதிகரியுங்கள் செலவு அதிகரித்தாலும் அல்லது விற்பனை குறைந்தாலும் உங்கள் தொழில் வீழ்ச்சியுறும் (Increase sales,Decrease cost. Anything less  and Your business will perish).

8.நேர்மறை எண்ணங்களோடு இருங்கள். எப்போதும் மனதில் வெற்றி எண்ணங்களே ஆக்கிரமிக்கட்டும்  (Be Positive).

9.தொழிலை தொடர்ச்சியாக உயர்த்திக்கொண்டே இருங்கள். வாடிக்கையாளர்களை ஈர்பதற்கும், விற்பனை மற்றும் லாபம் உருவாவதற்கும் இதுதான் சிறந்த வழி(Continuously improve Your business . It’s the best way to attract customers and generate sales and profits).

10.உங்களிடம் வேலை பார்ப்பவர்களை நம்புங்கள்(Believe in Your people).

11.லாபம் முழுவதையும் செலவழித்து விடாதீர்கள். இதுதான்  நீங்கள் தொழிலில் கற்கவேண்டிய  மிக முக்கியப் பாடம்(Never run out of money. It’s the most important lesson in business).

12 ஒவ்வொரு நாளும் புது வாடிக்கையாளர்களை பிடிக்கவேண்டும் என்று வெறியுடன் உழையுங்கள்(Attract new customers every day).

13. விடாப்பிடியாக இருங்கள். குறிக்கோளை  விட்டுவிடாதீர்கள். விட்டுவிடும்போது நீங்கள்  தோல்வியடைகிறீர்கள் (Be persistent. Don’t give up. You only fail if You Quit).

14. தொழிலின்  முத்திரை குறியீட்டை உருவாக்குங்கள். நற்பெயரை சம்பாதியுங்கள் (Build a Brand Name. Earn Your reputation).

15.வாய்புகள் யாருக்காகவும் காத்திருக்காது. கிடைத்தவுடன் தாவிப் பிடித்துகொள்ளுங்கள் (Opportunity waits for no one)

நன்றி - tamilentrepreneur
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment