தேசிய வீடமைப்பு அபிவருத்தி அதிகார சபையினால் 339 வீடமைப்புக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன

(அஷ்ரப் ஏ சமத்)


தேசிய வீடமைப்பு அபிவருத்தி அதிகார சபையினால் நாடாளரீதியில் 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2017  ஜூலை வரையிலான காலப்பகுதியில்  339 வீடமைப்புக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  அவற்றில்  45046 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.   

வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாசவின் ஆலோசனையின் கீழ் செமட்ட செவன வீடமைப்பு அபிவிருத்தித் திட்டம் 2015ல் முன்னெடுக்கப்பட்டு கிராமிய பிரதேசங்களில் எழுச்சிக் கிராமங்கள் திறந்து வைக்கப்பட்டு வருகின்றன. 

மட்டக்களப்பில் 1000 வீடுகள் ,வடமாகாணத்தில் 2551 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

செமட்ட செவன ' வீடமைப்பு அபிவிருத்தி  வேலைத்திட்டம்

செமட்ட செவன வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ்  2017 ஆம் ஆண்டில் உங்கள்  காரியாலய அதிகாரப் பிரதேசம்  உட்பட நாடு பூராவும் அரச பொதுத் திறைசேரியில் நிதி முதலீடு 6138 மி.ருபாவாகும் . 2017 ஜூலை மாதம் 21ஆம் திகதியாகும் பொழுது இந்த வேளைத்திட்டம் பல்வேறு உப வேலைத்திட்டங்களின் கீழ் 183 கிராமங்களில்  22178 வீடுகளின் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கு மேலதிகமாக 2016   மற்றும் 2015ஆம் ஆண்டினுள் நாட்டின் அணைத்து மாகாணங்களும் உள்வாங்கப்பட்ட விதத்தில் 339 கிராமங்களில் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் அங்கு நிர்மாணிக்கப்படும் வீடுகளின் எண்ணிக்கை 45046 ஆகும்.

செமட்ட செவன தேசிய வீடமைப்பு திட்டத்தின் கீழ் 2017 வருடத்திற்காக முதலீடு செய்யப்படவுள்ள மேற்குறிப்பிட்ட 6138 மி.ருபாவில் 2017ஜூலை 21ஆம் திகதிவரை பொதுத் திறை சேரியினால் வழங்கப்பட்டுள்ள நிதி 3085 மி.ருபாவாகும். இது திறைசேரியில் வழங்கப்பட்ட நிதி முதலீட்டு இலக்கின் 50.26 வீதமான அளவினை அடைந்து கொண்ட ஒரு சர்ந்தர்ப்பமாக குறிப்பிடலாம்.

திறைசேரியினால் முதலீடு செய்யப்பட்டுள்ள மேற்படி பணத்தினை செமட்ட செவன தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் பின்வரும் உப வேலைத்திட்டங்களுக்காக முதலீடு செய்யப்படவுள்ளது.

மாதிரிக் கிராம வேலைத்திட்டம். விசிரி நிவாச மற்றும் எழுச்சிக் கிராம வேலைத்திட்டம்,வடமாகாண மாதிரி கிராம வேலைத்திட்டம். சிறுநீரக நோயாளர்களுக்கான வீடமைப்புத்திட்டம், மட்டக்களப்பு மாவட்ட விசேட உதவி வேலைத்திட்டம், வவுனியா மாவட்டத்தின் போகஸ்வௌ வீடமைப்புத்திட்டம, யுத்த வீரர்களுக்கான விருசுமித்துரு' வீடமைப்பு வேலைத்திட்டம. ஏழ்மை ஒழிப்பு நிலையான மாதிரிக்கிராம வேலைத்திட்டம், குறைந்த செலவு தொழில்நுட்ப திட்டம்


.இந்த அணைத்து வீடமைப்பு அபிவிருத்தி விடயங்கள் உட்பட வீடமைப்பு திட்டங்கள் சூழ அனைத்து அபிவிருத்தித் திட்டங்களை ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் பூர்த்தி செய்யுமாறு  கௌரவ வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் அவர்கள் சகல வீடமைப்பு அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 

.உத்தேச அணைத்து வீடமைப்பு திட்டங்களும் வீடு கொள்வோர்கள் வசிப்பதற்கு ஏற்ப பாதைகள், நீர்வசதிகள் மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் உரிய முறையில் பெற்றுக் கொடுப்பதற்கு அவசியம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகளின் இணைப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளப்பட்டு வருகின்றது. 

சிறு நீரக நோயர்களுக்கான வீடுகள்.

.அதேபோல் எதிர்காலத்தில் 'விசிரி' கடன் வழங்கும் வேளையிலும் மற்றும் மாதிரிக் கிராமங்களை திறந்து வைக்கும் வைபவங்களின் போது சிறுநீரக நோயாளர்களுக்hக வீடுகளை நிர்மாணிப்பதற்காக நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தற்பொழுது நிதி வசயினைப் பெற்றுக் கொண்டுள்ளவர்களின் பங்களிப்புடன் குறிப்பிட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  

வடமாகாண வீடமைப்பு வேலைத்திட்டம். 

வடமாகாணத்தில் உள்ள -05  மவாட்டங்களும் உள்வாங்கப்படும் விதத்தில் உத்தேச 49 வீடமைப்புத்திட்டங்களிலும் பயனாளிகள் 2551 பேர்களுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் வேளைத்திட்டத்தினை கண்டிப்பாக குறிப்பிட்ட இலக்காக கொள்ளப்பட்டுள்ளன. மற்றும் நிறுவனங்களின் உதபியுடன் அந்த திட்டங்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை  பெற்றுக் கொண்டதன் பின்னர் அந்த அணைத்து வீடுகளையும்  திறந்து வைப்பதற்கும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. யுத்த்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கம் விசேட நிதி ஒதுக்கீட்டின் மூலம் ஒவ்வொரு வீடுகளை நிர்மாணிக்கவென 5 இலட்சம் ருபா வழங்கப்பட்டு இவ் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

போகஸ்வௌ வீடமைப்புத்திட்டம் 

வவுனியா தெற்கு பிரதேச செயலளார் பிரிவில் போகஸ்வௌ விசேட வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் 09 வீடமைப்பு திட்டங்களில் புதிய வீடுகள் மற்றும் ;புதுப்பிக்கப்பட்ட வீடுகள் என 1740 வீடுகளை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அந்த உத்தேச வேளைத்திடத்தின் கீழ் புதுப்பிக்கப்படும் அணைத்து வீடுகளின் நிர்மாணப்பணிகள் 2017 செம்படம்பர் மாதத்திற்கு முன்னர் பூர்த்திசெய்தல் வேண்டும்.  அத்துடன் புதிதாக நிர்மாணிகப்படவுள்ள வீடுகளின் நிர்மாணப் பணிகள் அணைத்தும் இவ்வருடம் முடிவதற்கு முன்னர்  பூர்த்தி செய்வதற்கு  இலக்காக கொள்ளப்பட்டுள்ளது. 478 மி.ருபா செலவில் மேற்கொள்ளப்படும் போகஸ் வௌ வீடமைப்பு வேலைத்திட்டம் அடுத்த இரு மாதங்களுக்குள் பூர்ததியடையவுள்ளது. 


கிராம சக்தி வேலைத்திட்டம்

வருமையிலான ஒழிக்கும் நிலைபேன் மாதிரிக் கிராம வேலதை;திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும்.  கிராமசக்தி  மாதிரிக்கிராம வேலைத்திட்டத்திற்கு ஏற்ப களுத்துறை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை மொன்ராகலை, இரத்தினபுரி  குருநாகல் அநுராதபுரம், பொலநருவை, மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் மாதிரிக் கிராமங்கள் 18ல் 752 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இந்த கிராமங்களின் என்ணிக்கையினை இந்த வருடத்தினுள் 40 திட்டங்கள் அதிகரிப்பதற்கு  வீடமைப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாசாவினால்  தீர்மாணிக்கப்பட்டுள்ளதுடன் தற்பொழுது நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனன. கிராமங்களில் நிர்மாணப்பணிகளை இலக்காக கொள்ளப்பட்டுள்ள குறிப்பிட்ட மாவட்டத்தில் அல்லது ஏனைய மவாட்டங்களில் பொருத்தமான காணித்துண்டுகளை அடையாளங்கண்டு  இந்த வேலைத்திட்டத்தின் கிழ் ஈடுபடுத்துவத்றகு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வீடமைப்புத் திட்டம்

மட்டக்களப்ப மாவட்டத்தில் விஷேட உதவி வீடமைப்புத் திட்டத்தின்படி 20 கிராமங்கள் மற்றும் கொத்தனிக் கிராமங்கள் 14 உள்வாங்கப்படும் விதத்தில் 1000 வீட்டு அலகுகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் இலக்காக கொள்ளப்பட்டுள்ளது. 500 மி. ருபா மதிப்பீடு  செய்யப்பட்டுள்ளது.  அணைத்து வீடுகளின் நிர்மாணப் பணிகளும் 2017 அக்டோபர் மாதத்தில் இடம்பெறும். உலக குடியிருப்பு தினத்திற்கு முன்னதாக பூர்ததி செய்வதற்கு இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது. 

விசுமித்துரு வீடமைப்பு வேலைத்திட்டம்

முப்படையினர் மற்றும் பொலிஸ் படையினருக்காக வீடமைப்பு வசதிகளை பெற்றுக் கொள்ளுவதற்காக ரணவிரு அதிகார சபையின் பங்களிப்புடன் தேசிய வீடமைப்புஅபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் விருசுமித்துரு'வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டில்  913 வீடுகள் நிர்மாணிப்பதற்கு இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.  

மவாட்ட மட்டத்தி;ல் அடையாளம் காணப்பட்டுள்ளன.  இந்த அணைத்து
வீடுகளினதும் நிர்மாணப்பணிகளுக்காக தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது . அதற்கு தேவையான நிபுணத்துவ ஒத்துழைப்பு முப்படையினராலும் மற்றும் பொலிஸ் படையினராலும் வழங்கப்படவுள்ளது.    தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின்  40ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியில் நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள்ன.  இவ்  வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு ஏற்ப மாத்தளை கேகாலை, புத்தளம், ஆகிய மவாட்டங்களினால் தலா ஒரு வீடமைப்பு  திட்டம் என்ற வகையில்  இரத்தினபுரி, பொலநருவை, மற்றும் அம்பாறை,  மவாட்டங்களில் தலா 02 திட்டங்கள் என்றவகையிலும்  ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 03 வீடமைப்புத ;திட்டங்களும் மொத்தமாக 12 திட்டங்களின் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படுவதுடன் இதன் கீழ்  350 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன.  . 

ஷில்ப சவிய வேலைத்திட்டம்  

நாடு தலுவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் செமட்ட செவன ஷில்ப சவிய வேலைதத்pட்டம் நிர்மாணக் கைத்தொழில்  அபிவிருத்தி அதிகார சபையின் உதவியுடன் நாடு பூராகவும் அமுல் செய்யப்பட்டுள்ளதுடன்  அந்த வேலைத்திட்டத்திற்கு புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட வேண்டிய இளைஞர் யுவதிகளை நிர்மாணத்துறையில்  பயிலுணர்களை அடையாளம் கண்டு உரிய முறையில் அவர்களைப் பயிற்றுவிக்கப்படுகின்றன.  இவ் இளஞைர் யுவதிகளை  அதிகூடிய  விதத்தில் இந்த பயிற்றப்பட்ட கலைஞர்களை செமட்ட செவன தேசிய வீடமைப்பு வேலைத்திட்டத்திற்காக  ஈடுபடுத்திக் கொள்ளப்படுகின்றன. 

  

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment