ஹஜ்ஜுப் பெருநாள் பரிசாக சாய்ந்தமருது மக்களுக்கு இனிப்பான செய்தியை வழங்கவிருக்கும் ஜெமீல்.

ஏ.எச்.எம். பூமுதீன்

அகில இலங்கை மக்கள் காங்கிரசை அழிக்க நினைத்த துரோகிகள் நேற்று வாயடைத்து போன பொன்னான நாள். நீதிமன்ற தீர்ப்பும், சாய்ந்தமருது பிரதேச சபை பிரகடன இறுதி உறுதி மொழியுமே அந்த துரோகிகளை வாயடைக்க வைத்த சம்பவங்களாகும்.

முகாவுடன் கூட்டு சேர்ந்து கட்சியை நீதிமன்றில் நிறுத்திய வை. எல். எஸ்ஸுக்கு இறைவன் தகுந்த தீர்ப்பை வழங்கினான்.

"நான்தான் கட்சி, நான்தான் செயலாளர் நாயகம்" என்ற அவரது ஆணவத்துக்கு- " நீங்கள் அல்ல செயலாளர்" என்ற தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம், குருநாகல் பேராளர் மாநாட்டில் தெரிவான சுபைதீனே தொடர்ந்து செயலாளர் நாயகமாக இருப்பார்" என்றும் தீர்ப்புக் கூறியது.

அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தலைமையில் வீறுநடை போட்டுக்கொண்டிருந்த கட்சியை அழிக்க நினைத்த துரோகக் கும்பலுக்கு சாட்டையடி வழங்கிய நாள் நேற்றய நாளாகும்.

கட்சி தொடர்பான முக்கிய பதவிகள் எதனையும் வழங்க முடியாமல் தடுத்த அந்த இருண்ட நாட்கள் அகன்று இன்றுமுதல் கட்சி வெற்றி நடை போடப்போகிறது.

இந்த நிலையில்தான், சாய்ந்தமருது மக்களின் நீண்டநாள் கனவான பிரதேச சபை பிரகடன வர்த்தமானி அறிவிப்பு திகதியும் கட்சியின் தலைவர், பிரதி தலைவர் ஜெமீல் ஆகியோருக்கு நேரடியாக அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பணிப்புக்கு இணங்க அமைச்சர் ரிஷாத், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் ஆகியோரை நேரடியாக அழைத்த அமைச்சர் பைசர் முஸ்தபா குறித்த வர்த்தமானி பிரகடன திகதியை அறிவித்தார்.

இன்ஷா அல்லாஹ் , இம்மாத இறுதியில் ஹஜ்ஜுப் பெருநாள் பரிசாக அந்த அறிவிப்பை சாய்ந்தமருது மக்களுக்கு வழங்க கட்சியின் பிரதி தலைவர் ஜெமீல் தயாராகி வருகின்றார்.

முகாவை விட்டு பிரிந்து- மக்கள் காங்கிரசுடன் இணையும் போது அவர் வைத்த ஒரே ஒரு நிபந்தனை சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற கோரிக்கையாகும். அதனை கட்சி தலைமையும் ஏற்றுக்கொண்டு இன்று அதில் இருவரும் வெற்றியும் கண்டு, வழங்கிய உறுதிமொழியையும் நிறைவேற்றி உள்ளார்கள்.

சாய்ந்தமருது மக்கள் இப்போது ஒரு தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்துள்ளார்கள். இதுகாலவரை, இந்த பிரகடனத்தை செய்யவிடாது தடுத்தது முகாவும் அதன் தலைமையும்தான் என்பதாகும்.

முகா எனும் கட்சி கல்முனை தொகுதியில் இருக்கும் வரை கல்முனை அபிவிருத்தி அடையாது மட்டுமன்றி, அதில் உள்ளவர்களையும் செய்ய விடாது என்பதட்கு முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜெமீல் உதாரண புருஷராக திகழ்கின்றார்.

கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றிய , வாக்குறுதியை நிறைவேற்றிய ஜெமீல், அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு குறிப்பாக சாய்ந்தமருது மக்களும் பொதுவாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்களும் நன்றியோடு இருப்பர் என்பதில் ஐயமில்லை.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment