அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் இடம் பெற்ற அபிவிருத்தி நிகழ்வு.

அட்டாளைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் 50 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள அவசர விபத்துப் பிரிவுக்கான 3 மாடி கட்டிடத் தொகுதி மற்றும் 10 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள மருத்துவ அதிகாரிகள் விடுதிக் கட்டிடம் என்பவற்றுக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று (27) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்றபோது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கட்டிடங்களுக்கான அடிக்கல்லை நட்டுவைத்தார்.

இந்நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் நீதி அமைச்சர் தலதா அதுகொரல, கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம, கிழக்கு முதலமைச்சர் நஸீர் அஹமட், சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஆர்.எம். அன்வர், கட்சி முக்கியஸ்தர்கள், வைத்தியசாலை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment