இம் முறை நடைபெறும் உயர்தர பரீட்சைக்கு 315,227 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.

கல்விப் பொதுத் தாரதர உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 2,230 நிலையங்களில் இன்று ஆரம்பமாகின்றது. இன்று முதல் அடுத்த மாதம் 2 ஆம் திகதி வரை உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளது.
உயர்தரப் பரீட்சைக்காக 315,227 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
பரீட்சை கடமைகளுக்காக சுமார் 28,000 உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார குறிப்பிட்டார்.
அத்துடன் பரீட்சை மோசடியில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளில் வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment