உயர்தர மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை நடாத்த இன்று நள்ளிரவு 12.00 முதல் தடை.


இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான, மேலதிக வகுப்புக்களை நடத்த இன்று நள்ளிரவு 12.00 முதல் தடை விதிக்கப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

மேலும், எதிர்வரும் செப்டம்பர் 2ம் திகதியுடன் பரீட்சைகள் நிறைவடையவுள்ள நிலையில், அன்றைய தினம் வரை குறித்த தடை நீடிக்கப்படுவதாக, பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார குறிப்பிட்டுள்ளார். 

குறித்த காலப் பகுதியில் மேலதிக வகுப்புக்களை ஒழுங்கு செய்தல், கருத்தரங்குகளை முன்னெடுத்தல், பரீட்சையுடன் தொடர்புடைய மாதிரி வினாக்களுடனான கேள்வி பத்திரங்களை வௌியிடல், அதனை விநியோகித்தல் போன்றவற்றுக்கு இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவரேனும் இந்த விதிகளை மீறினால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக, டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார மேலும் கூறியுள்ளார். 

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள், எதிர்வரும் 8ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. 

மேலும், ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சைகள் எதிர்வரும் 20ம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment