பாலியல் குற்றத்துக்காக தண்டனை பெற வெயிட்டிங் லிஸ்ட்டில் இருக்கும் மேலும் இரு சாமியார்கள்.

பாலியல் பலாத்கார வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கப் பெற்றுள்ள சாமியார் குர்மீத் ராம்ரஹிமைத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம், கொலை வழக்கில் தண்டனை பெற வேண்டிய வெயிட்டிங் லிஸ்ட்டில் இரு சாமியார்கள் இருக்கின்றனர். 

இதில், 75 வயது அசாராம் பாபுவும் ஒருவர். குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் ஆசிரமங்களை நடத்தி வந்த அசராம் பாபுவும் இவரின் மகன் நாராயணனும் ஆசிரமத்தில் தங்கியிருந்த குஜராத் சகோதரிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு நிலுவையில் இருக்கிறது. ராஜஸ்தானில் 16 வயது, பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கும் உள்ளது. 2013ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதத்தில் கைது செய்யப்பட்ட இவர் ஜோத்பூரில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஜாமீனில் விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. அசாரம் பாபு வழக்கில், விசாரணையை துரிதமாக நடத்த உத்தரவிட்டும் மந்தகதியில் நடத்துவதாக குஜராத் அரசை உச்சநீதிமன்றம் நேற்று கடுமையாக எச்சரித்துள்ளது.

இந்தப் பட்டியலில் அடுத்த இடத்தில் இருப்பவர் சாமியார் ராம்பால். இவரும் ஹிரியானாவைச் சேர்ந்தவர்தான். கம்பிக்குப் பின்னால் இருக்கும் குர்மீத்துக்கும் இவருக்கும் ஹரியானாவில் பலத்த தொழில் போட்டி. இவருக்கு ரோக்டக் மாவட்டத்தில் கரோதா கிராமத்தில் ஆசிரமம் உள்ளது. 2006ம் ஆண்டு சோனு என்பவர் இறந்தது தொடர்பாக சாமியார் ராம்பால் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது.

நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக, பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. விசாரணையில் ஆஜராகாமல், 43 முறை 'டிமிக்கி ' கொடுத்தார். நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. 2014ம் ஆண்டு ஹிசாரில் உள்ள ஆசிரமத்தில், 12 நாள்கள் போராட்டம் நடத்தி இவரை போலீஸார் கைது செய்தனர். தன் பக்தர்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தி இவர் பதுங்கியிருந்தார். சாமியார் ராம்பாலை போலீஸ் கைது செய்த போது, வன்முறை வெடித்து 6 பேர் கொல்லப்பட்டனர். 11 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் ஹிசார் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment