நிலைமாற்று நீதிப் பொறிமுறை தொடர்பானஉப குழு பயிற்சி செயலமர்வு.

ஆதம்பாவா முஹம்மத் பரகதுல்லாஹ்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள், சமூக சமய பொறுப்பாளர்கள் மற்றும் உள்ளுர் அரசியல் பிரமுகர்களுக்கான நிலைமாற்று நீதிப் பொறிமுறை தொடர்பான இலங்கை சமாதான தேசியப் பேரவையின் 18வது உப குழு பயிற்சி செயலமர்வு அம்பாறை ரெறல் வதிவிட விடுதியில்  நடை பெற்று வருகிறது.

இலங்கை சமாதான தேசியப் பேரவையின் ஏற்பாட்டில் “சமயங்களினூடாக நல்லிணக்கம்காணல்” எனும் கருப் பொருளைக் கொண்டதாக இலங்கையில் இடம் பெற்ற முரண்பாடுகளின் பின்னர் ஏற்படவேண்டிய நல்லிணக்கத்திற்காகவூம்இ சமூக ஒத்திசைவிற்காகவூம் சமயங்களுக்கிடையில் மக்களுடன் மக்கள் இணைந்து செயற்படுவதனை வலுப்படுத்தல் முரண்பாடுகளின் காரணமாக மூன்று தசாப்தங்களாக பிளவூபட்டுள்ள மக்கள் பிரிவினர் ஒருவரை ஒருவர் சந்தித்து கலந்துரையாடும் வகையில் செயற்பட ஆதரவு வழங்குவதன் மூலம் கடந்த காலங்களில் ஏற்பட்டுவிட்ட மாறாத கசப்புணர்வுகளை தொடர்ந்தும் நிலைபெறச் செய்யாது அவர்களிடையே ஆழ்ந்த புரிந்துணர்வை பேணி வளர்த்தல், சகிப்புத் தன்மை, மற்றும் ககோதரத்துவம், ஒத்துழைப்பு என்பவற்றின் மூலம் பன்மை வாத தேசியத்துவ அடையாளத்தை வளர்க்கவும் பயனுள்ள வகையில் பெறுமானங்களை பகிர்ந்து கொள்ளுதலும் மற்றும் பல் வகைமை ஒரு பலம் என மதித்து வாழ வழி வகை செய்தலும் இச்செயலமர்வின் நோக்கமாக அமைந்திருந்தது.இலங்கை சமாதான தேசியப் பேரவையின் திட்ட உத்தியோகத்தர் எப்.நிக்ஸன் குரூஸ் தலைமையில் நடை பெற்ற இந்த இரண்டு நாள் செயலமர்விலும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணி கே.ஐங்கரன் நிலைமாற்று நீதிப் பொறிமுறை தொடர்பான விரிவான விளக்கம் வழங்கினார்.இப்பயிற்சிபட்டறையின் மூலம் நிலைமாற்று நீதிப்பொறிமுறை பற்றிய அறிவை விருத்தி செய்தல்இவேற்று நாடுகளில் நடைமுறையில் உள்ள நிலைமாற்று நீதிப் பொறிமுறை தொடர்பான அறிவை வழங்குதல் இ எமது நாட்டில் உள்ள நிலைமாற்று நீதிப் பொறிமுறைகளை கற்றுக் கொள்ளல்இ எவ்வாறு செயற்படுகிறது என்பதைப் தெரிந்து கொள்ளல், அதன் முன்னேற்றத்தை புரிந்து கொள்ளல், நிலைமாற்று நீதிப் பொறிமுறை பற்றிக் கலந்துரையாடவும், ஊக்குவிக்கவும், பங்கேற்பாளர்களிடமிருந்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன.இச்செயலமர்வில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் முஸ்லிம் சிங்கள சிரேஸ்ட ஊடகவியலாளர்களும், சமூக சமய பொறுப்பாளர்களும் மற்றும் உள்ளுர் அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment