அமைச்சர் ஹக்கீம் பசீருக்கு எதிராக நடவடிக்கை எடுத்து தன்னை குற்றமற்றவராக நிறுபிக்க வேண்டும்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமைப் பற்றி வசீர் அவர்களினால் அவரது முகநூலினூடாக குமாரியினால் எழுதப்பட்டதாக குறிப்பிடப்படும் பொலிஸ் முறைப்பாட்டு பத்திரம்மொன்று வெளியாகியுள்ளது.

அவரினால் வெளியிடப்பட்ட இந்த பத்திரத்தில் ஹக்கீம் அவர்களின் நடவடிக்கையானது மிகவும் கீழ்தரமானதாக உள்ளது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் செயல்பாடுகள் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், அவர் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இயங்கும் முஸ்லிம்களின் ஏகோபித்த ஆதரவை பெற்ற கட்சியின் தலைவராக அவர் இருப்பதனால் அவருடைய செயல்பாடுகள் நிச்சயமாக முஸ்லிம் சமூகத்தையும் பாதிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

ஆகவே, வசீர் அவர்களினால் வெளியிடப்பட்ட இந்த பொலிஸ் முறைப்பாட்டு கொப்பியானது பொய்யாகவும் இருக்கலாம், அதனை ஹக்கீம் அவர்கள் வசீருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக விடுவாரேயானால் இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மை என்ற நிலைக்கு இட்டுச்செல்லலாம்.

ஆகவே ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனிசனைக் கடிக்கும் செயல்போன்றுதான் பசீர் அவர்களின் நடவடிக்கை அமைந்துவருவதை காணலாம். அவரின் இந்த நடவடிக்கையானது ஹக்கீம் மீது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்துகின்றது. அதில் குறிப்பிடப்பட்டதற்கு எதிராக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அதன் மூலம் பசீர் அவர்கள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும், அவருக்கு பதவிகள் கிடைக்கவில்லை என்பதற்காகவே பொய்யான குற்றச்சாட்டுக்களை வைக்கின்றோரோ என்றும் என்னத் தோன்றுகிறது. இதற்கு ஹக்கீம் அவர்கள்தான் தக்கபாடம் கற்பிக்கவேண்டும்.
அப்படி அவர் நடவடிக்கை எடுக்கத் தவரினால், பசீர் குறிப்பிடுவது உண்மை என்றாகிவிடும்.


ஆயிரந்தான் இருந்தாலும் பசீர் எனது முன்னால் நண்பன் என்ற தோரணையில் அவர் மீது அவர் நடவடிக்கை எடுக்காமலும் விடலாம், அப்படியென்றால் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இயங்கும் கட்சியிலிருந்து ஹக்கீம் விலகிக் கொள்ளவேண்டும்.

ஆகவே புனிதமான கட்சியில் தலைவராக இருக்கும் ஹக்கீம் அவர்கள் பசீரின் மீது உடனடியாக சட்டநடவடிக்கை எடுத்து இதுவெல்லாம் பொய்யான செய்திகள் என்று நிறூபிப்பதுடன், பசீர் அவர்களுக்கு தகுந்த தண்டனையும் வாங்கிக்கொடுக்க வேண்டியது தலைவர் ஹக்கீம் மீதுள்ள தார்மீக கடமையுமாகும்.


ஏனென்றால் அவர் முக்கியமான முஸ்லிம் கட்சியின் தலைவராக இருப்பதனாலாகும். அவருடைய செயல்பாடுகள் முஸ்லிம் சமூகத்தின் மீதும் களங்கத்தை உண்டுபண்ணும் என்பதனால் அவர் இந்த விடயத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே அவர் சார்ந்த சமூகத்துக்கு செய்யும் உதவியுமாகும்.

அப்படி இல்லையென்றால் பசீர் சொல்வது உண்மை என்று ஏற்றுக் கொள்ளவேண்டியதுதான்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment