நல்லாட்சியின் உருவாக்கத்துக்கு உதவி செய்தமைக்கு கூலிகளை பெறும் பொது பல சேனா ?

இவ்வாட்சியை நிறுவுவதில் பொது பல சேனாவின் பங்களிப்புஅபரிதமானதெனலாம்அதிலும் குறிப்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸவை முஸ்லிம்களிடமிருந்து பிரிக்கும் செயற்பாட்டை மிகவும் கனகச்சிதமாக செய்திருந்தது.அதற்கான பலா பலன்களை தற்போது அவ் அமைப்பினர்பெற ஆரம்பித்துள்ளனர்.

ஏற்கனவே மஹியங்கனை பொதுபல சேனா அமைப்பாளருக்கு சுதந்திர கட்சிஅமைப்பாளர் பதவியை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.

நான்கு பொலிஸ் குழுக்கள் போட்டு தேடிய ஞானசார தேரர் கடைசியில்ராஜமரியாதையுடன் பிணையில் சென்றார்.

அடுத்த கட்டமாக நேற்று பிற்பகல் மாத்தறை வேஹெஹேன பூர்வாராம ரஜமஹாவிகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிரமவிமலஜோதி தேரருக்கு தென்னிலங்கையின் பிரதான சங்கநாயக்கர் என்றபதவிக்கான நியமன ஆவணத்தை வழங்கி வைத்துள்ளார்இவர் பொது பல சேனாஅமைப்பின் ஸ்தாபக தலைவர் என்பது குறிப்பிடத்தக்கதுஅளுத்கமை கலவரம்இடம்பெற்ற காலப்பகுதியில் எல்லாம் இவரே அவ் அமைப்பின் தலைவராகஇருந்தார்.

பொது பல சேனா அமைப்பானது தோற்றுவிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்று வரைமுஸ்லிம்களுக்கு விரோதமான செயற்பாட்டையே பிரதானமாககொண்டுள்ளது.இதன் தலைவர் எப்படியானவராக இருப்பார் என்பதை யாரும்வார்த்தைகளால் எழுதி விளங்கப்படுத்த வேண்டிய அவசியமில்லை எனலாம்.

அந் நிகழ்வில் குறித்த தேரரை ஜனாதிபதி மைத்திரி மிகவும் புகழ்ந்து தள்ளியுள்ளார்.இவரை ஒழுக்கமிக்க பௌத்த மதத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் ஒருவராகவும்கூறியுள்ளார்ஜனாதிபதி மைத்திரியும் முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனையைகொண்டிருப்பதால் பொது பல சேனாவின் செயற்பாடுகள் அனைத்தும் பௌத்தமதத்தை பாதுகாக்கும் செயற்பாடுகளாகவே தெரியும்அதன் முன்னாள் தலைவர்பௌத்த மதத்தை பாதுகாக்கும் செயற்பாட்டாளராகவும் தெரிவார்.

இவ்வாறான ஒருவருக்கு இந்த இடம் வழங்கப்பட்டுள்ளமையானது ஆபத்தின்அறிகுறியாகும்இதனை இவ்வாட்சிக்கு பொதுபல சேனா அமைப்பு செய்தஉதவிக்கான பரிகாரமாகவும் நோக்கலாம்இன்றைய ஆட்சியில் பொதுபலசேனவின் சிந்தனைகள் பல அரச அங்கீகாரத்தோடு இடம்பெறுவதோடு மிகவும்நுணுக்கமான முறையில் முஸ்லிம்களை எதிர்கொள்ள முனைகிறார்களா என்றஅச்சமும் எழுகிறது.

அஹமட்
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment