கிழக்கை அபிவிருத்தி செய்யும் ஆளுமை யாரிடமுள்ளதோ அவரிடம் முதலசை்சர் பதவி இருப்பதே சிறந்தது.

தற்போது கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பதவி தமிழர் ஒருவருக்குவழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக முன்வைக்கப்பட்டுவருகின்றமையை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது,சிலர்வௌிப்படையாக இதனை முன்வைத்து வருவதுடன் இன்னும் சிலர் சமூகஊடகங்கள் வாயிலாகக் கூட இது தொடர்பில் பகிரங்மாக பேசி வருகின்றனர்,

இந்த நிலையில் தமிழ் மக்களுக்கு பெருமை சேர்க்க பதவிகள் அவசியமாஇல்லை மக்கள் பயனடைய பதவிகள் அவசியமா என்ற கேள்வி இதன் போது முன்வைக்கப்பட வேண்டிய தேவையுள்ளது,

ஏனெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு விவாசயத்துறை அமைச்சு மற்றும்கல்வியமைச்சு ஆகிய இரு பிரதான அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளன.கிழக்கு மாகாணத்தைப் பொருத்தவரை கல்வி மற்றும் விவசாயம் ஆகியன  மிகப் பிரதானமான துறைகள் என்பதை நாம் சுட்டிக்காட்ட வேண்டும்.

கடந்த  2015 ஆம் ஆண்டு  கல்வியமைச்சையும் விவசாய அமைச்சையும் பொறுப்பேற்ற இரு அமைச்சர்களாலும் கல்வி மற்றும் விவசாயத்துறை ஆகியன அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளனவா????

கல்வியமைச்சரால் கல்வி சார் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுள்ளனவா என்ற கேள்விக்கான விடையை நாம் ஆராய்வோமேயானால் நாம் பல்வேறு விடயங்களை அறிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்,

கிழக்கின் முதலமைச்சராக ஹாபிஸ் நசீர் அஹமட் பதவியேற்றதிலிருந்து கல்வியியல் கல்லூரிப் பிரச்சினை மற்றும் பட்டதாரிகளின் பிரச்சினை ஆகிய இரண்டு பாரிய பிரச்சினைகள் தோற்றம் பெற்றன, இந்த இரண்டு பிரச்சினைகளும் கல்வி சார் பிரச்சினைகள் என்பதை யாரும் அறியாமலில்லை அவ்வாறானால் அந்தப் பிரச்சினைகள் தீர்க்கப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எடுத்தாரா என்ற வினாவுக்கு இல்லை என்றே பதிலளிக்க வேண்டும்.

அவ்வாறானால் கல்வியியல் கல்லூரிப் பிரச்சினையின் போது கிழக்கில் தமிழ் முஸ்லிம் சிங்கள மாணவர்கள் வௌி மாகாணங்களுக்கு நியமனம் பெற்று நிர்க்கதியாய் நின்ற போது கிழக்கின்  கல்வியமைச்சர் எடுத்த நடவடிக்கை தான் என்ன??? ஆனால் கிழக்கின் முதலமைச்சரே கல்வியமைச்சரின் பணியையும் முன்னெடுத்து இன மத பேதமின்றி மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வினைப் பெற்றுக் கொடுத்தார்.

சரி இப்போது பட்டதாரிகளின் விடயத்திற்கு வருவோம்,

கிழக்கு மாகாண பட்டதாரிகள் வீதியோரம் நின்று போராடிய போது அவர்களுடன் நின்று புகைப்படங்களுக்கு காட்சி தர மாத்திரம் எல்லா அரசியல்வாதிகளும் முண்டியடித்து நின்றனர்,

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண கல்வியமைச்சர் உட்பட அனைவரும் புகைப்படங்களை அலங்கரிக்க முண்டியடித்து நிற்கையில் பட்டதாரிகளின் தீர்வுக்காய் முன்னின்றவரும் கிழக்கு முதலமைச்சரே என்பதில் ஐயமில்லை, பல்லாயிரம் வாக்குறுதிகளை பலர் முன்வைத்த போதும் கிழக்கு முதலமைச்சரின் போராட்டத்தினால் கொண்டு வரப்பட்ட 1700 பேருக்கான நியமனங்களுக்கான  நேர்முகப் பரீட்சைகளுக்கு இன்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.

ஆகவே நாம் ஆதிக்க மனோபாவத்தில் எமது ஆட்சி தொடர்பில் தீர்மானங்களை முன்னெடுப்பதால் அதனால் பாதிக்கப்படப் போவது மக்களே என்பதில் ஐயமில்லை, மக்கள் நல்ல தலைமைகளுக்கே தவம் கிடக்கின்றார்கள் .ஒரு செயற்திறன் மிக்க தலைமையை பயன்படுத்த வேண்டியது  அந்த மக்களின் கடமை,ஆனால் அவ்வாறான தலைமையையும் இனம் மற்றும் மதம் என்ற மேலாதிக்கப் போக்கினால்  இழக்கக் கூடிய சூழ்நிலையை நமது சுயலாப அரசியலுக்காக நாம் ஏற்படுத்தப் போகின்றோமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

தமிழ் மக்களான நாம் யுத்தம் மற்றும் பல்வேறு காரணங்களால் பின்னடைவைக் கண்டுள்ளோம் ,ஆகவே எட்டாக்கனியான அபிவிருத்தியை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை எமக்குள்ளது,இதனை கொண்டு சேர்ப்பதி்ல் எம் தலைமைகளுக்குள்ள இயலாமையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே திறந்த மனதுடன் இது தொடர்பில் நாம் சிந்திக்க முன்வர வேண்டும் ,தற்போதைய கிழக்கு முதலமைச்சர் ஊடாக நமது பல பகுதிகளில் அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சம்பூர் சீதனவௌி பகுதியில் ஆடைத் தொழிற்சாலையொன்று நிர்மாணிக்கப்படுகின்றது, கிழக்கு முதலமைச்சரின் காலத்தில் ஆரையம்பதி உட்பட பல பகுதிகளில் புதிய பிரதேச சபைக் கட்டடங்கள் திறக்கப்பட்டன.

அத்துடன் ஜனாதிபதியின் விஜயங்களின் போது சம்பூர் மற்றும் ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வுகளில் எமது நூற்றுக்கணக்கான சகோதரர்களுக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன.

தற்போது ஆரையம்பதியில் 100 மில்லியன் ரூபாசெலவில்  நிர்மாணிக்கப்படவிருக்கும் சுற்றுலாத் தகவல் மையம் ஆகியனவற்றை எமக்கு குறிப்பிடலாம்,

எனவே கிழக்கை இனத்துவரீதியான வகையறாவுக்குள் நாம் தள்ளிவிடாமல் யாருக்கு அதனை அபிவிருத்தி செய்யக் கூடிய ஆளுமையுள்ளதோ அவரிடமே கையளிப்பது சிறந்தது என்பதே உண்மையான தமிழர்களின் கருத்து
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment