தேர்தல் காலங்களில் இனவாதம் துாண்டப்படுவது பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

தேர்தல் வரும் போது  இனவாதமும் பிரிவினைவாதமும் தூண்டி விடும் கலாசாரமொன்று   இலங்கையில் அண்மைக்காலமாக தோற்றம் பெற்று வருவது இலங்கையின் அரசியல் கலாசாரத்துக்கு பாரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது   என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்தெரிவித்தார்,

தேர்தல்  வருவதற்கான சாத்தியப்பாடுகள் நெருங்கும் போது இன மற்றும் மத பாகுபாட்டை தூண்டி தமது  சுய அரசியல் இலாபத்துக்காக  மக்களிடையே  குரோதங்களை  வளர்க்க அரசியலில் வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் முயற்சித்து வருவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை  சமய பாடசாலை  கல்வி முறைமையில் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்கத்தை  நிறுவனப்படுத்தல் நிகழ்வு  திருகோணமலை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற போதே  கிழக்கு மாகாண முதலமைச்சர் இதனைக் கூறினார்.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா சம்பந்தன்,அமைச்சர் ஏ,எச்,எம்  பௌசி,கிழக்கு  மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம,கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் உள்ளிட்டவர்களுடன் மாகாண  அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாண  சபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்,

அங்குதொடர்ந்து  கருத்த தெரிவித்த  கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்,  மக்கள் மத்தியில் சிலர் இன ரீதியான மற்றும் மத ரீதியான உணர்வுகளை  தூண்டி  தமது  குறுகிய அரசியல் இலாபங்களை  ஈடேற்றிக் கொள்ள முனைகின்றனர்.

கடந்த  காலத்திலும்  தற்போதும்  மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஆட்சியாளர்கள்  தமது  அரசியலுக்காக  இனங்களிடையே வீண் அச்சங்களையும் சந்தேகங்களையும்  உண்டாக்கி அதில்  குளிர்காய்ந்து வருவதை சிறுபான்மை  மக்கள் நன்கறிந்துள்ளனர்.

ந்த  நிலையில்  தான் தற்போது  சிறுபான்மையினரிக்கிடையே  பிரிவினைகளைத் தூண்டுவதற்கு  போலியான சம்பவங்களை தோற்றுவித்து அதனூடாக தமது  அரசியலை வலுப்படுத்த சில சக்திகள்  முனைவதை  அணமைக்காலமாக காணமுடிகின்றது,

வடக்கு கிழக்கிற்கு  வெளியே  எவ்வாறு கடந்த கால ஆட்சியாளர்கள் இனவாதங்ளைத் தூண்டி  பெரும்பான்மை மக்களிடையே  பிரிவினைவாத்த்தை  முன்னெடுக்கின்றார்களோ அதே யுக்தியை கையாண்டு   அவர்களுடன் சேர்ந்து இயங்கும் மற்றுமோர் தரப்பினர் அதே இனவாத்த்தை இன்று வடக்கு கிழக்கில்  சிறுபான்மை மக்களிடையே  விதைப்பதற்கான நடவடிக்கைளை முன்னெடுக்கின்றனர்.

ஆகவே  சிறுபான்மை மக்களாகிய நாம்  எப்போதும் இனவாத மதவாத போக்கிற்கு  எதிரானவர்கள்  என்பதை அதனைத் தற்போது தமிழ் முஸ்லிம் மக்களிடையே  பரப்ப முற்படவோருக்கு  பறைசாற்றவேண்டும்.

இதனூடாக   இவர்கள் இரண்டு விடயங்களை  சாதிக்க முற்படுகின்றார்கள் என்பதை  மிகத் தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும், தறபோது  சிறுபான்மையினர்  தாம் நீண்ட காலம் எதிர்ப்பார்த்திருந்த  அரசியல் தீர்வொன்று வருவதற்கான சாத்தியக் கூறுகள் தற்போது  உள்ள நிலையில் அவ்வாறான தீர்வொன்று வரும் பட்சத்தில் தமது  அரசியலை முன்னெடுக்க முடியாது என்ற நோக்கத்தினால் அதனை சீர்குலைக்கவே  இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று நாம் கூறலாம், சிறுபான்மை சமூகங்கள் இரண்டிற்கு மத்தியிலும் வீண் சந்தேகங்களையும் அச்சங்களையும் தோற்றுவித்து  இந்த தீர்வைப்பெற்றுக் கொள்ளும் நிலையில் சிறுபான்மை சமூங்கள் இல்லை என்பதை  காட்டுவதற்கானசெயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் ஐயா மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஶ்ரீலங்கா முஸ்லிம்  காங்கிரஸின் தலைவருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம்  அவர்களும் இந்த  அரசியல்  தீர்வைப்பெற்றுக் கொடுப்பதில் பிரதான பங்குதார்ர்களாக இருப்பதால் அரசியல்  தீர்வு மக்களுக்கு கிட்டும் பட்சத்தில் இவர்கள் இருவரும்  சிறுபான்மை மக்கள் மத்தியில் தனிச்செல்வாக்குடன் திகழ்வார்கள் என்பதையறிந்து அதைத் தடுப்பதற்கும் இவர்கள் திட்டமிட்டு செயற்படுகின்றனர் எனக் கூறலாம்.

அத்துடன்  தேர்தல்களுக்கான சாத்தியப்பாடுகள் உள்ள நிலையில் தமது  வங்குரோத்து  அரசியலின் இயலாமையை  மூடி மறைக்க மக்களிடையே இனவாத்த்தையும்  மதவாத்த்தையும் புகுத்தி அதனூடாக தம் பக்கம் மக்களை திசை திருப்புவதற்கான முயற்சயையும் சிலர் முன்னெடுக்கின்றனர்,

இதனூடாக அவர்கள் சிறுபான்மை மக்களின் எதிர்காலத்துக்கான நம்பிக்கை ,அமைதி,பாதுகாப்பு என்பவற்றையே  அடகுவைக்கின்றார்கள் எனபைதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இன்று  எமது  கிழக்கு மாகாண சபையின்  ஆட்சியில் எந்தவொரு இனத்துக்கோ சமூகத்துக்கோ பாரபட்சம் ஏற்படாத வகையிலான அபிவிருத்திகளையே நாம் முன்னெடுத்து வருகின்றோம், நாம்  ஆட்சிபொறுப்பேற்று  இரண்டு  ஆண்டுகளே ஆகியுள்ள  நிலையில் கிழக்கின் கூட்டாட்சியுடன் கூடிய நல்லாட்சியில்  சகல பிரதேசங்களுக்கும் சம்மான அபிவிருத்திகளை முன்னெடுக்கின்றோம்,

ஒவ்வொரு மாவட்டங்களையும் பிரதேசங்களையும் சேர்ந்த எமது  மாகாண அமைச்சர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும் தமது அபிவிருத்திகளை  முன்னெடுத்தே வருகின்றனர்.

கிழக்கின் மீதான பாராபட்சத்திற்கு மத்தியிலும் பல்வேறு  தடங்கல்களுக்கு  மத்தியில் எமது மக்களின் அபிவிருத்திக்கான நிதிகளை  ஒவ்வொரு  அமைச்சிலிருந்தும்பெற்று  வந்து  அதனை  நாம்  சம்மாக பகிர்ந்தளித்து தமிழ் முஸ்லிம் என்ற  பாகுபாடின்றி சகல பிரதேசங்களுக்கும் அபிவிருத்திகளுக்கான நிதிகளைப் பெற்றுக்கொடுத்தே வருகின்றோம்,
உதாரணத்துக்கு நாம் தற்போது  எவ்வாறு ஏறாவூரில் சுற்றுலாத் தகவல்மையம் ஒன்றை  அமைக்கத் திட்டமிட்டுள்ளோமோ அதேபோன்று  தமிழ் மக்கள் செறிந்து வாழும்  ஆரையம்பதி பகுதியிலும்  நாம் 100 மில்லியன் ரூபாசெலவில்  பலருக்கும்  தொழில்வாய்ப்புக்களைபெற்றுக்கொடுக்கும் வண்ணம்  சுற்றுலாத் தகவல்மையமொன்றை  அமைக்கவுள்ளோம்.

அத்துடன் பட்டதாரிகள் விடயத்தில் பலரும் எனக்கு தனிப்பட்ட ரீதியிலும் எமது மாகாண சபைக்கு விரல் நீட்டினார்கள் ஆனால் இன்று பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கான விண்ணப்பங்களை நாம்கோரியுள்ளோம்,அத்துடன்  விரைவில்  இன்னும் ஓரிரு மாதங்களுக்குள் அவர்களுக்கான நியமனங்களையும் வழங்குவாம்,

ஆகவே  எம்மீது  குற்றஞ்சாட்டுபவர்கள் அவர்களின் இயலாமையையே வெ ளிப்படுத்துகின்றார்கள் அவர்களின் விமர்சனங்களை மாத்திரம் முன்வைக்கும் போது  நாம் அதற்கான தீர்வுகளை செயல்களில் நிரூபித்து வருகின்றோம்.

சுயலாப அரசியல்நோக்குடையவர்களின் குறுகிய எண்ணங்களை   ஈடேற்ற கிழக்கு மாகாண கூட்டாட்சி அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என்பதை நாம்  சுட்டிக்காட்டியாகவேண்டும்,

இன்று  மத்தியில் இரண்டு பிரதான கட்சிகள் அமைத்துள்ள கூட்டாட்சியின் முரண்பாடுகள் பகிரங்கமாக விமர்சிக்கப்படுகின்றன.

ஆனால் நான்கு  பிரதான கட்சிகள் சேர்ந்து அமைத்துள்ள கிழக்கின் கூட்டாட்சி அரசாங்கம் எமது பிரச்சி னைகளை நான்கு சுவர்களுக்குள்பேசித் தீர்த்து சுமுகமான ஆட்சியை முன்னெடுத்து நல்லிணக்கத்துக்கும் நல்லாட்சிக்கும் முன்னுதாரணமாய்த் திகழ்கின்றோம்.

கிழக்கில் மக்களிடையே  உள்ள நல்லிணக்கத்தையும் அமைதியையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கப்பதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை எனபைதை உறுதியுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment