ஓட்டமாவடி காவத்தமுனை மையவாடியை புனரமைக்கும் திட்டம் கிழக்கு முதலமைச்சரால் அங்குரார்ப்பணம்.

ஓட்டமாவடி    காவத்தமுனை பிரதேச  அல் முபாரக் ஜும்ஆப் பள்ளி மையவாடி கிழக்கு முதலமைச்சரின் நிதி ஒதுக்கீட்டினால் புனரமைக்கப்படவுள்ளது.

குறித்த பள்ளிவாயல் மையவாடி புனரமைப்புக்கென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் 18 இலட்ச ரூபாவினை ஒதுக்கீடு செய்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

மையவாடி புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் கடந்த வௌ்ளிக்கிழமை ஜும் ஆத் தொழுகையின் பின்னர் ஆரம்பித்து வைக்கப்பட்டது,

.
மழைகாலங்களில் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதில் சிரமங்களை எதிர்நோக்கிவந்த காவத்தமுனை அல்-முபாரக் ஜும்ஆ பள்ளிவாயல் நிருவாகத்தினரும் பொதுமக்களும் கௌரவ முதலமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இந்த நிதியானது ஒதுக்கீடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மையவாடியின் ஒரு பகுதியானது மண்ணிட்டு_நிரப்பப்பட்டு_மழைகாலத்தில்_எவ்வித_சிரமும்_இல்லாமல்_ஜனாசாக்களை_அடக்கம்_செய்வதற்கு_ஏதுவான_வகையில்_புனரமைக்கப்படும்.

கௌரவ முதலமைச்சர், மற்றும் கிழக்குமாகாண சபை உறுப்பினர் கௌரவ அல்ஹாஜ் ஷிப்லி பாறூக் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துவைத்தனர். நீண்டகாலமாக குறித்த பள்ளிவாயல் நிருவாகத்தினரும், பிரதேச மக்களும் எதிர்நோக்கிவந்த பாரியதொரு பிரச்சினைக்கு கிழக்குமாகாண முதலமைச்சரின் ஊடாக நிரந்தரத் தீர்வு கிட்டியுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment