கிழக்கு மாகாண அரச உத்தியோகத்தர்கள் ஹஜ் யாத்திரைக்கு விடுமுறை பெறுவதில் சாதக முடிவு.

கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஹஜ் யாத்திரைக்கு செல்வதில் விடுமுறை பெறுவது தொடர்பில்  காணப்பட்ட பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சாதகமான நடவடிக்கைகளை எடுத்துள்ளார்,

கிழக்கு மாகாண ஆளுனருடன் இடம்பெற்ற பிரத்தியேக சந்திப்பின் போதே பல சாதகமான தீர்மானங்கள் குறித்து கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கவனம் செலுத்தியுள்ளார்.

இதற்கு முன்னர்  கிழக்கு மாகாண ஆசிரியர்கள் மற்றும்   மற்றும் உத்தியோகத்தர்கள்  ஹஜ்கடமையை பூர்த்தி செய்வதில் சில சிக்கல்களை எதிர்கொண்டு வந்தனர்,

இந்த நிலையில் தமது ஐம்பெருங்கடமைகளுள் ஒன்றான ஹஜ்கடமையை நிறைவேற்றவதற்கான விடுமுறையை பெற்றுக் கொள்வதில் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் முறையிட்டிருந்தனர்.

இதற்கமைவாகவே  கிழக்கு முதலமைச்சர் ஆளுநரிடம் நடத்திய பேச்சுவார்த்தைகளின் போது இந்த விடயம் தொடர்பில் சாதகமாக தீர்மானங்கள் எட்டபட்டுள்ளதுடன் எதிர்வரும் தினங்களுள் இது தொடர்பான இறுதித் தீர்மானம் அறிவிக்கப்படவுள்ளது,
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment