இஸ்லாம் மதத்திற்கு மாறி மலேசிய இளவரசியை மணந்தார் நெதர்லாந்து கால்பந்து வீரர்.


கோலாலம்பூர்:


மலேசிய இளவரசி துங்கு துன் ஆமினா சுல்தான் இப்ராகிம் (31). இவர் ஜோகேள் சுல்தானின் ஒரே மகள் ஆவார். நெதர்லாந்தை சேர்ந்த கால்பந்து வீரர் டென்னிஸ் எவர்பாஸ் (28).டென்னிஸ் சிங்கப்பூர் கால்பந்து அணியில் மார்க்கெட்டிங் மானேஜராக பணிபுரிந்தார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியா வந்து இருந்தார்.ஒரு ஓட்டலில் காபி குடிக்க சென்ற போது இளவரசி துங்குவை சந்தித்தார். அதன் மூலம் நண்பர்களான இவர்கள் நாளடைவில் காதலர்களாக மாறினர்.பின்னர் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதை தொடர்ந்து டென்னிஸ் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தனது பெயரை டென்னிஸ் முகமது அப்துல்லா என மாற்றிக் கொண்டார்.அதைத்தொடர்ந்து இவர்களது திருமணம் மலேசியாவில் ஜோகேளில் உள்ள செரீன் ஹில் அரண்மனையில் நடந்தது. அதில் இருவரின் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.


Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment