கிழக்கு முதலமைச்சரினால் மேலும் இரண்டு ஆடைத் தொழிச்சாலைகள் திறந்து வைப்பு.

பெண்களை     வௌிநாட்டுக்கு அனுப்பக் கூடாது என்ற கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் கொள்கையை வலுப்படுத்தும்  விதமான ஆடைத் தொழிற்சாலைகள் நிறுவும் திட்டத்திற்கமையை இரண்டு தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன,

கடந்த சனிக்கிழமை ஏறாவூர் நகரில் ஆடைத் தொழிற்சாலையொன்றும் நெசவுத் தொழிற்சாலையொன்றும் திறந்து வைகக்ப்பட்டன, இன மத பாகுபாடின்றி தமிழ் முஸ்லிம் யுவதிகள் இந்த ஆடைத்தொழிற்சாலைகளில் பணிபுரிகின்றனர்,

குறித்த ஆடைத் தொழிற்சாலையினை ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த தனவந்தரான  அஷ்ஷெய்க் லூர்த்தாவின் புதல்வர்கள் திறந்து வைத்தனர்.

கிழக்கில்  உள்ள  பெண்கள் வௌிநாடுகளுக்குச்  சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுப்பதை கண்டு அதற்கு மாற்று வழியாக கிழக்கு மாகாணத்திலேயே அவர்களுக்கு தொழில்வாய்யபுக்களை வழங்கும் விதமாக கிழக்கு மாகாண முதலமைச்சரால் ஆடைத்தொழிற்சாலைகள் நிறுவும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது,

இதனடிப்படையில்  ஏறாவூரில்  ஏற்கனவே ஆடைத்தொழிற்சாலையொன்று நிறுவப்பட்ட நிலையில் சம்மாந்துறை மற்றும் சம்பூர் சீதனவௌியிலும் ஆடைத் தொழிற்சாலைகள் நிர்மாணி்க்கப்பட்டு வருகின்றன,

இந்நிலையிலேயே  ஐக்கிய அரபு இராச்சியத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களுடன் கைகோர்த்து இந்த ஆடைத் தொழிற்சாலைகளை நிறுவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment