பிரபாகரன் எச்சந்தர்ப்பத்திலும் சரணடைவதற்கு தயாராக இருக்கவில்லை.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உயிருடன் பிடிக்கவில்லை. அதற்கான சந்தர்ப்பமும் எமக்கு கிடைக்கவில்லை. என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர், மே மாதம் 16ஆம் திகதி இரவு வேளையில் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது. இதன்போதே அவர் உயிரிழந்திருக்கலாம்.

புலிகளின் தலைவர் பிரபாகரன் அவருடைய மெய்ப் பாதுகாவலர்களுடன் பதுங்கி இருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரனின் இருப்பிடத்தை இராணுவத்தினர் முற்றுகையிட்டனர். இதன்போது பிரபாகரனின் மெய்ப் பாதுகாவலர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டது. இதனால்தான் பிரபாகரன் உயிரிழந்திருக்க வேண்டும். ஒரு பக்கத்தில் இருந்து தான் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பிரபாகரனின் உடலை பார்க்கும் போது இது தெரிகின்றது. எனினும் அவர் இறந்து விட்டார் என்ற செய்தி அப்போது களத்திலிருந்த இராணுவத்தினரே என்னிடம் கூறினார்கள்.

அவரை ஒருபோதும் உயிருடன் பிடிக்கவில்லை. அவருடைய உடல் கண்டு பிடிக்கப்பட்டு விட்டது என்றே கூறப்பட்டது. அவரை உயிருடன் பிடித்தமைக்கான எந்த தடயங்களும் இல்லை. அதற்கான புகைப்படங்களும் இல்லை, அந்த சந்தர்ப்பமும் எமக்கு கிடைக்கவில்லை.

தன்னால் இறுதி வரை யுத்தம் செய்ய முடியும், வெற்றி பெற முடியும், இந்த நிலைமையை மாற்ற முடியும் என பிரபாகரன் நம்பிக்கையுடன் இருந்தார்.

இறுதி யுத்தத்தின் போது 50 பேர் சரணடைய தயாராக இருப்பதாக நோர்வேக்கான முன்னாள் தூதுவர் தெரிவித்திருந்தார். ஆனால் அது குறித்து மேலதிக தகவல்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. எனினும் பிரபாகரன் எச்சந்தர்ப்பத்திலும் சரணடைவதற்கு தயாராக இருக்கவில்லை. யுத்தம் நிறைவடைவதற்கு இரு மாதங்களுக்கு முன்னர் அவருடைய தொலைபேசி அழைப்பை நாம் கேட்டோம். இதன்போது கே.பி எனப்படும் குமரன் பத்மநாதனுக்கும் பிரபாகரனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை செவிமடுத்தோம்.

அதில் யுத்தத்தை கைவிட்டு விடுங்கள், வெளிநாட்டுக்கு ஓடி விடுங்கள், பிறகு ஒரு நேரம் வந்து நாட்டை மீட்டு எடுப்போம் என குமரன் பத்மநாதன் பிரபாகரனிடம் தெரிவித்தார்.இதற்கு பதிலளித்த பிரபாகரன், என்னால் நிலைமைகளை மாற்ற முடியும், ஆயுதங்கள் சற்று தேவை, என கூறினார். இந்த உரையாடலில் இருந்து நாம் விளங்கிக் கொண்டது பிரபாகரனுக்கு ஒருபோதும் சரணடையும் எண்ணம் இருக்கவில்லை என்பதாகும்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வை பெறுவதற்கு பிரபாகரன் விரும்பவில்லை. இதற்கு அவரிடம் நியாயபூர்வமான காரணங்கள் இருந்ததை கண்டு கொண்டேன். பிரபாகரன் பூச்சியத்திலிருந்தே விடுதலைப் புலிகள் அமைப்பை கட்டி எழுப்பினார். நான் பதவி ஏற்கும் போது விடுதலைப் புலிகள்அமைப்பில் 35,000 பேர் இருந்ததாக தகவல் கிடைத்தது.தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகிய மூன்று படைகளையும் அவரால் கட்டி எழுப்ப முடிந்தது.

இலங்கை படையினரிடம் இருந்த ஆயுதங்களுக்கு நிகரான ஆயுதங்களை அவரால் பெற முடிந்தது. படையினர் மற்றும் பொலிஸார் செல்ல முடியாத அளவிலான நிலப்பரப்பினை அவரால் பரிபாலனம் செய்ய முடிந்தது. முல்லைத்தீவு, ஆனையிறவு, பூநகரி ஆகிய பகுிகளை பார்க்கையில் படையினரை தோற்கடிப்பதற்கான ஏதுநிலைகள் காணப்பட்டன. இவ்வாறான நிலையிலேயே அவருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வை பெறுவதற்கு அவர் விரும்பவில்லை என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். (Thanks - Seithy)
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment