இலங்கையில் 15 சதவீதத்துக்கும் அதிகமானோர், பிள்ளைப்பேறு அற்ற நிலையில் உள்ளனர்.

இலங்கையில் 15 சதவீதத்துக்கும் அதிகமானோர், பிள்ளைப்பேறு அற்ற நிலையில் உள்ளனர் என இணங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார, அமைச்சினால், அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, பிள்ளைப்பேறு அற்ற தன்மை (மலட்டுத்தன்மை) தொடர்பில் அறிவுறுத்தும் வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.

ஜனாதிபதி தலைமையில் செவ்வாய்க்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலேயே, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பிள்ளைப்பேறு அற்ற தன்மை (மலட்டுத்தன்மை) தொடர்பான பிரச்சினைக்காக, பொதுமக்கள் மற்றும் சுகாதார சேவை அதிகாரிகளின் கவனத்தைச் செலுத்தி, இவ்வருடத்தில் தேசிய குடும்ப திட்டமிடல் தினத்தை செப்டம்பர் 26ஆம் திகதி ​அனுஷ்டிப்பதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.
Share on Google Plus
முக்கிய குறிப்பு: மக்கள் நண்பன் இணையதளத்திற்கு பல்வேறு ஊடகவியலாளர்களால், வாசகர்களால் மற்றும் அரசில்வாதிகளின் ஊடக இணைப்பாளர்களால் செய்திகள் மற்றும் தகவல்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன இவ்வாறு அனுப்பி வைக்கப்படும் செய்திகளுக்கு மற்றும் தகவல்களுக்கு மக்கள் நண்பன் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். செய்திகளை அனுப்பி வைப்போர் நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / செய்திகளை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம். கடுமையான கருத்துக்கள் மற்றும் பிழையான செய்திகள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை பாரபட்சமின்றி நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறான செய்திகள் தொடர்பாக எங்களுக்கு தெரியப்படுத்த info@makkalnanbannews.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.

0 comments:

Post a Comment